பல் துலக்கும் பிரஷை எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் தெரியுமா?
வாய் ஆரோக்கியத்தை பாதுகாக்க தினமும் இரு முறை பல் துலக்குவது அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பல் துலக்கும் பிரஷ் மற்றும் நாக்கு சுத்தப்படுத்திகளை சரியான கால இடைவெளியில் மாற்றாவிட்டால், பற்கள் மற்றும் ஈறுகளில் பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
பொதுவாக பல் துலக்கும் பிரஷை 3 முதல் 4 மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.
பிரஷின் இழைகள் வளைந்து அல்லது தேய்ந்து இருந்தால் அதற்கு முன்பே மாற்றுவது நல்லது.

காய்ச்சல், தொண்டை வலி போன்ற நோய்களிலிருந்து மீண்ட பிறகும் பிரஷை மாற்ற மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
குறிப்பாக, பல் துலக்கும் பிரஷை குறைந்தபட்சம் வெதுவெதுப்பான நீரில் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
குழந்தைகள் பயன்படுத்தும் பிரஷை 1 முதல் 2 மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். ஏனெனில் அவர்கள் பிரஷை கடிப்பதால் அது விரைவில் சேதமடையும்.
பல் துலக்கிய பிறகு பிரஷை நீரில் கழுவி, நீரை உதறி காற்றோட்டமான இடத்தில் செங்குத்தாக வைக்க வேண்டும்.

மேலும், குறிப்பாக பிரஷை கழிவறை அல்லது அதிக தூசி உள்ள இடங்களில் வைக்கக்கூடாது.
அதேபோல், நாக்கு சுத்தப்படுத்திகளில் பிளாஸ்டிக் வகையை 3 முதல் 4 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றுவது அவசியம்.
எஃகு அல்லது தாமிர வகைகளை தினமும் சுத்தம் செய்தால் ஒரு வருடம் வரை பயன்படுத்தலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |