கேரளா ஸ்டைல் சுவையான பலாப்பழ பாயசம்: எப்படி செய்வது?
பண்டிகை காலங்களில் அல்லது ஏதேனும் வீட்டில் விசேஷங்கள் என்றால் உடனே நாம் செய்க்கூடிய ஒரு இனிப்பு வகை தான் இந்த பாயசம்.
இதுவரைக்கும் நாம் பால் பாயாசம், பருப்பு பாயாசம், சேமியா பாயாசம் போன்றவற்றை சாப்பிட்டிருப்போம்.
தற்போது சுவையான பலாப்பழ பாயசம் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பலா சுளை - 30
- வெல்லம் - 200g
- தேங்காய் பால் - 3 கப்
- ஏலக்காய் பொடி - சிறிதளவு
- முந்திரி - 10
- பாதம்- 5
- பிஸ்தா- 5
- நெய் - 50g
செய்முறை
முதலில், பலா சுளையில் உள்ள கொட்டைகளை நீக்கி பலா சுளையை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி சிறிது சிறிதாக நறுக்கி வைத்துள்ள பலா சுளையை நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.
வேக வைத்த பலா சுளையை சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
இதையடுத்து ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைக் காய்ச்சி வடிகட்டி பாகு காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு கடாயில் வெல்லப்பாகை ஊற்றி கொதிக்க வைத்து அதில் அரைத்து வைத்துள்ள பலா சுளையை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பிறகு சிறிது கொதித்தவுடன் தேங்காய் பால் சேர்ககவும்.
நன்கு கொதித்து வந்ததும் நெய்யில் வறுத்த முந்திரி, பிஸ்தா, பாதாம் போன்றவற்றை சேர்த்துஇறக்கினால் சுவையான பலாப்பழ பாயாசம் ரெடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |