பிரட் இல்லாமலும் சாண்ட்விச் செய்யலாம்..எப்படின்னு தெரிஞ்சிக்கோங்க !
சாண்ட்விச் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு உணவு வகையாகும்.
சாண்ட்விச்சில் சீஸ் சாண்ட்விச்,வெஜ் சாண்ட்விச், சிக்கன் சாண்ட்விச் போன்ற பல வகைகளில் சாண்ட்விச் உள்ளன.
வீட்டிலேயே 10 நிமிஷத்தில் பிரட் இல்லாமல் சாண்ட்விச் செய்து சாப்பிடலாம்.இந்த ரெசிபியை காலை ப்ரேக் ஃபாஸ்டில் எடுத்துக்கொள்ளலாம்.
cook with kushi
தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு - 4
- கோதுமை /மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தக்காளி - 1(சிறியது)
- ஸ்வீட் கார்ன் - 2 டேபிள் ஸ்பூன்
- குடைமிளகாய் - 2 டேபிள் ஸ்பூன்
- வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன்
- துருவிய கேரட் - 1
- சீஸ் - 2 டேபிள்ஸ்பூன்
- மிளகு தூள் - ½ டீஸ்பூன்
- மிக்ஸ்டு ஹேர்ப்ஸ் - ½ டீஸ்பூன்
செய்முறை
முதலில் உருளைக்கிழங்கு கழுவி சுத்தம் செய்த பிறகு, பெரிய அளவுகளில் துருவி கொள்ளவும். துருவிய உருளைக்கிழங்கை குளிர்ந்த நீரில் அலசி எடுக்கவும்.
herzindagi
இதனுடன் தேவையான அளவு கோதுமை மாவு அல்லது மைதா மாவு மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
பின் துருவியே உருளைக்கிழங்கை தோசை கல்லில் தட்டி, அழுத்தி விடவும்,மூடி போட்டு 3-5 நிமிடங்கள் வேகவிடவும்.
பின்பு மெதுவாக திருப்பி போட்டு மறுபுறமும் நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கு வேகும் சமயத்தில் தேவையான வெங்காயம், தக்காளி வெள்ளரிக்காய், ஸ்வீட் கார்ன், குடைமிளகாய் போன்ற உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை பொடியாக நறுக்கி தயாராக வைக்கவும்.
cookpad.com
இதனுடன் துருவிய சீஸ், உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும்.
உருளைக்கிழங்கு நன்கு வெந்த பிறகு, ஒரு பக்கத்தில் மட்டும் தயாராக வைத்துள்ள காய்கறி கலவையை வைத்து மூடவும்.
சீஸ் உருகி வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.ஆறிய பின் துண்டுகள் போட்டு பரிமாறலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |