வேகமான முடி வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய்: ஒரு பொருள் போதும் வீட்டிலேயே தயாரிக்கலாம்
முடி வளர்ப்பது என்பது தற்போது ஆண், பெண் என இருவருக்கும் இருக்கும் ஒரு ஆசைதான்.
இருப்பினும் பலருக்கும் வழுக்கை, முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் காரணமாக முடி கொட்டி விடுகின்றன.
அந்தவகையில், கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு பாதாம் எண்ணெய் பெரிதளவில் உதவுகிறது.
கூந்தல் வளர்ச்சிக்கு பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெய்யில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடி உதிர்வை தடுக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
இதில் வைட்டமின் ஈ சத்து உள்ளது, இது மயிர்க்கால்களுக்கு ஊட்டமளித்து முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது.
பாதாம் எண்ணெய் ஒரு இயற்கையான மாய்ஸ்டுரைசர், இது தலைமுடியில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது.
இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உச்சந்தலையை ஊட்டமளிப்பதன் மூலம் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியைத் தூண்டுகின்றது.
பாதாம் எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துவது அடர்த்தியான, வலுவான மற்றும் ஆரோக்கியமான முடியை அடைய உதவும்.
எப்படி தயாரிப்பது?
முதலில் ஒரு கப் பாதாம் பருப்பை 2 அல்லது 3 முறை நன்கு கழுவவேண்டும்.
பின் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
அடுத்து இதனை ஒரு கண்ணாடி குவளையில் போட்டு 3 நாட்கள் மூட்டி போட்டு வைக்கவும்.
பின்னர் எண்ணெய் நன்கு பிரிந்துவந்ததும் இதனை ஒரு பருத்தி துணியில் வடிகட்டினால் பாதாம் எண்ணெய் தயார்.
இதனையடுத்து கூந்தலை நன்கு சிக்கெடுத்து பாதாம் எண்ணெயை உச்சந்தலையில் தேய்த்து 30 நிமிடம் நன்கு மசாஜ் செய்யவும்.
பின் ஒரு நாள் இரவு முழுக்க ஊறவைத்து பின்னர் மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.
பாதாம் எண்ணெயை தேங்காய் எண்ணெயுடன் கலந்து கூந்தலுக்கு பயன்படுத்தலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |