வீட்டிலேயே கற்றாழை ஜெல் செய்யலாம்: இந்த இரண்டு பொருள் இருந்தா போதும்
கற்றாழை ஒரு சதைப்பற்றுள்ள தாவரமாகும். இது அதன் இலைகளில் தண்ணீரை ஜெல் வடிவில் சேமித்து வைத்திருகின்றது.
இந்த ஜெல் பூச்சி கடித்தல், சிறிய வெட்டுக்கள் அல்லது காயங்கள் மற்றும் பிற தோல் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கின்றது எனலாம்.
இந்த ஜெல்லை கடைகளில் தான் அதிகமாக வாங்குவார்கள். பல கடைகளில் வாங்கப்படும் கற்றாழை தயாரிப்புகளில் சாயங்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் சேர்க்கைகள் உள்ளன.
புதிய கற்றாழை இலைகளைப் பயன்படுத்தி கற்றாழை ஜெல்லை நீங்களே எளிதாக எவ்வாறு தயாரிப்பது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
-
கற்றாழை
- விட்டமின் இ
செய்முறை
முதலில் தேவையானளவு கற்றாழையை வெட்டி எடுத்துக்கொள்ளவும், பின்னர் கற்றாழையை இரண்டாக வெட்டி அதிலில் உள்ள ஜெல் வடிவத்தை தனியாக எடுக்க வேண்டும்.
இறுதியாக விட்டமின் இ எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்துக்கொண்டே இருக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் இலகுவான கற்றாழை ஜெல் தயாராகிவிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |