Baby Potato: பார்த்தாலே சாப்பிடத்தூண்டும் பேபி உருளைக்கிழங்கு வறுவல்
உருளைக்கிழங்கு பூமிக்கடியில் விளைகின்ற ஒரு கிழங்கு வகை ஆகும். இது தென் அமெரிக்க கண்டத்தை பூர்வீகமாக கொண்ட ஒரு பயிர்வகை.
பிற்காலத்தில் காலனி ஆதிக்க நாட்டின் வியாபாரிகளால் உலகெங்கிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.
உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து அப்படியே சாப்பிட்டாலே பசியை போக்க வல்ல ஒரு உணவாக இருக்கிறது.
இந்த பதிவில் குட்டி குட்டி உருளைக்கிழங்கை கொண்டு ருசியான வறுவல் செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வெங்காயம் - 3
- தக்காளி - 2
- இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
- தனியா தூள் - 1 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- புளி -சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- வெல்லம் - தேவையான அளவு
- பெருங்காயம் - சிறிதளவு
- பேபி உருளைக்கிழங்கு - அரை கிலோ
- கறிவேப்பிலை - 50 கிராம்
- கடலெண்ணெய் - 50 மி.லி
- பச்சை மிளகாய்- காரத்திற்கு ஏற்ப
செய்முறை
* முதலில் 1/2 கிலோ பேபி உருளைக்கிழங்கை 5-6 நிமிடங்கள் தண்ணீரில் போட்டு வேக வைத்தபின் தோலை உறித்து விடவும்.
* 50 கிராம் கறிவேப்பிலையை எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுக்கவும். பின்னர் கருவேப்பிலையை மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட்டாக அரைத்து எடுக்கவும்.
* அதன்பிறகு 50 மி.லி கடலெண்ணெய்யை ஒரு கடாயில் ஊற்றி நன்று சூடானபின் கடுகு சேர்க்கவும். நன்கு பொறிந்தவுடன் பச்சைமிளகாயை கீறி போடவும்.
* அதனுடன் 3 நடுத்தர அளவு வெங்காயத்தை சேர்த்து வெண்ணிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் இஞ்சி-பூண்டு விழுது 2 கரண்டி சேர்க்கவும். 2 தக்காளியை சிறிதாக வெட்டிக் கடாயில் போட்டு நன்றாக வதக்கவும்.
* அடுத்ததாக 1/2 கரண்டி மஞ்சள் தூள், 1 கரண்டி தனியா தூள், 1 கரண்டி மிளகாய் தூள் சேர்த்து 20 விநாடிகளுக்கு கிண்ட வேண்டும்.
* அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து புளி தண்ணீர் சேர்க்க வேண்டும். தேவையான அளவு உப்பு, 1 1/2 கரண்டி வெல்லம் சேர்க்க்க வேண்டும்.
* 5 நிமிடத்திற்கு பின் அரைத்து வைத்திருக்கும் கறிவேப்பிலை பேஸ்ட்டை கடாயில் போட்ட பின்னர் வேக வைத்த பேபி உருளைக்கிழங்கை போட்டு சிறிதளவு பெருங்காயம் சேர்க்க வேண்டும். இறுதியில் நன்கு வறுத்தெடுத்தால் சுவையான பேபி உருளைக்கிழங்கு வறுவல் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |