நரைமுடியை கருப்பாக மாற்றும் அவுரி எண்ணெய்.. இந்த பொருள்கள் இருந்தாலே போதும்
பொதுவாக நரைமுடியை கருப்பாக மாற்றுவதற்கு இண்டிகோ பவுடரை (அவுரி இலை பொடி) பயன்படுத்துவோம். இதனை நாம் ஹேர் டை (Hair Dye) அடிப்பதற்காக பயன்படுத்துவோம்.
இந்த அவுரி இலை பொடியை வழக்கமாக ஹென்னா பொடியோடு சேர்த்து Hair Pack போடுவார்கள். அது சற்று சிரமமாக இருக்கும்.
அதனால், நரைமுடியை கருப்பாக மாற்றும் ஹெர்பல் டை ஆயிலை ஆயில் பாத்திற்கு முன்பு யூஸ் செய்து பாருங்கள். இந்த எண்ணெய் பற்றிய செய்முறையை பார்க்கலாம்.
முடி உதிர்வைத் தடுக்க நெல்லிக்காயை எவ்வாறு பயன்படுத்துவது: முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறந்த வழிகள் இதோ
தேவையான பொருள்கள்
நெல்லிக்காய் - 5
சின்ன வெங்காயம் - 5
அவுரி இலை - ஒரு கப்
மருதாணி இலை - அரை கப்
கரிசலாங்கன்னி - அரை கப்
வேப்பிலை - கால் கப்
செம்பருத்தி இலை - கால் கப்
கறிவேப்பிலை - கால் கப்
வெந்தயம்- ஒரு ஸ்பூன்
கருஞ்சீரகம்- ஒரு ஸ்பூன்
ஆவாரம்பூ - ஒரு ஸ்பூன்
ரோஜா இதழ் - ஒரு ஸ்பூன்
வெட்டிவேர்- ஒரு ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்- 3 லிட்டர்
செய்முறை
* முதலில் நெல்லிக்காய் மற்றும் வெங்காயத்தை அரைத்து வடிகட்டி சாறை எடுத்துக்கொள்ள வேண்டும்.
* வாணலியில் தேங்காய் எண்ணெய்யில் பாதி அளவில் ஊற்றி காய்ந்ததும் இந்த சாற்றை ஊற்ற வேண்டும்.
* அவுரி இலை, கரிசலாங்கன்னி இலை, வேப்பிலை, மருதாணி, செம்பருத்தி இலை ஆகியவற்றை அரைத்து கொதிக்கின்ற எண்ணெய்யில் சேர்க்க வேண்டும்.
* பின்னர், வெந்தயம், கருஞ்சீரகம், ஆவாரம்பூ, வெட்டிவேர், ரோஜா இதழ் ஆகியவற்றை பொடியாக்கி அதில் சேர்க்க வேண்டும்.
* இறுதியில் மீதமுள்ள தேங்காய் எண்ணெய்யில் இதனை ஊற்றி காய்ச்சி எடுத்தால் ஹெர்பல் ஹேர் டை ஆயில் தயாராகிவிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |