முட்டையே இல்லாமல் குழந்தைகளுக்கு பிடித்த Brownie செய்வது எப்படி?
பொதுவாகவே அனைவருக்கும் Brownies என்றால் பிடிக்கும். அதிலும் குழந்தைகள் இதை எப்போது கொடுத்தாலும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதை நீங்கள் கடையில் தான் வாங்கி சாப்பிட வேண்டுமா? வீட்டிலும் தயார் செய்து சாப்பிடலாம். ஆனால் ஒரு சிலருக்கு இதில் முட்டை சேர்த்து செய்து சாப்பிடுவது பிடிக்காது.
அதற்கு பதிலாக முட்டை இல்லாமல் எப்படி குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கு பிடித்த Brownies செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- டார்க் சாக்லேட் - 1 கப்
- உப்பில்லாத வெண்ணெய் - 1/2 கப்
- மைதா - 3/4 கப்
- கோகோ பவுடர் - 1/3 கப்
- பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி
- உப்பு - 1/4 தேக்கரண்டி
- சர்க்கரை - 3/4 கப்
- வெண்ணிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி
- கெட்டி தயிர் - 3/4 கப்
- சாக்லேட் சிப்ஸ்
- வால்நட்ஸ்
செய்முறை
1. பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடு செய்யவும். பின்பு அதின் மேல் மற்றோரு பாத்திரத்தை வைத்து அதில் டார்க் சாக்லேட், உப்பில்லாத வெண்ணெய் சேர்த்து சாக்லேட் கரையும் வரை கலந்துவிடவும்.
2. பின்பு சாக்லேட்டை இறக்கி வைத்து அதில் சர்க்கரை, வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலந்துவிடவும்.
3. பின்பு தயிர் சேர்த்து கலந்துவிடவும்.
4. சல்லடையில் மைதா, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து சலித்துக்கொள்ளவும்.
5. பிறகு சாக்லேட் கலவையில் சலித்த மாவை சேர்த்து கலந்து 5 நிமிடம் வைக்கவும்.
6. பின்பு கேக் அச்சில் பட்டர் பேப்பரை வைத்து அதில் தயார் செய்த மாவை ஊற்றி சமன் செய்யவும்.
7. ஓவனை 180 டிகிரியில் சூடு செய்து மாவை வைத்து 180 டிகிரியில் 30 நிமிடம் பேக் செய்யவும்.
8. முட்டையில்லாத பிரௌனி தயார்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |