அடர்த்தியான நீளமான கூந்தலை பெற உதவும் தேங்காய்ப்பால் எண்ணெய்: வீட்டிலேயே எப்படி தயாரிப்பது?
தேங்காய்ப்பாலில் உள்ள வைட்டமின் சி கூந்தலுக்கு ஊட்டமளிக்க பெருமளவு உதவும். மேலும் முடி உதிர்தலை கட்டுப்படுத்தும்.
இந்த தேங்காய்ப்பாலில் தயாரிக்கப்படும் எண்ணெயை நன்றாக கூந்தலில் தேய்த்து உச்சந்தலை மசாஜ் செய்து குளித்துவரலாம்
தேங்காய்ப்பாலில் தயாரிக்கப்படும் எண்ணெயில் ஊட்டச்சத்துக்கள் உள்ள முடி கருக்காருன்னு நீளமாகவும் அடர்தியாகம் வளர பெரிதும் உதவியாக இருக்கும். இதனை எப்படி தயாரிப்பது?
தேவையான பொருட்கள்
- தேங்காய்- 1
- நெல்லிக்காய்- 2
- செம்பருத்தி இலை- 1 கைப்பிடி
- கருவேப்பிலை- 1 கைப்பிடி
- முருங்கை இலை- 1 கைப்பிடி
செய்முறை
முதலில் தேங்காயை உடைத்து துருவி அதை 2 மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்.
அடுத்து எடுத்துவைத்துள்ள செம்பருத்தி இலை, நெல்லிக்காய், கருவேப்பிலை மற்றும் முருங்கை இலையை கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காயுடன் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து இதனை நன்கு அரைத்துக்கொள்ளவும். அடுத்து தேங்காயுடன் சுத்தம் செய்து வைத்துள்ள நெல்லிக்காய் மற்றும் இலைகளை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இதனை ஒரு பாத்திரத்தில் பருத்தி துணி போட்டு வடிகட்டி நன்கு பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.
இதனை தொடர்ந்து ஒரு இரும்பு கடாயை அடுப்பில் வைத்து பிழிந்து எடுத்துள்ள கலவையை சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.
தேங்காய் பால் நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கவிடவும். எண்ணெய் தயாரானதா என்பதை அறிய அதில் கருவேப்பிலை போட்டால் நன்கு பொரிந்து வரும்.
இந்த கட்டத்தில் எண்ணெயை இறக்கி ஆறவைக்கவும். பின் இதனை வடிகட்டி ஒரு டப்பாவில் சேகரித்து தினசரி தலைமுடியில் பயன்படுத்தி வந்தால் முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |