சருமம் தகதகன்னு ஜொலிக்க தேங்காய்ப்பால் மாய்ஸ்சரைசர்: எப்படி தயாரிப்பது?
ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த தேங்காயை பயன்படுத்தி ஏராளமான சத்துக்கள் பெறவும் , சரும அழகை மேம்படுத்த முடியும்.
தேங்காய் பால் நம் சரும ஆரோக்கியத்திலும் கூந்தல் ஆரோக்கியத்திலும் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
அந்த வகையில் தேங்காய் பாலைக் கொண்டு மாய்ஸ்சரைசர் எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
shutterstock
தேங்காய் பால் மாய்ஸ்சரைசர்
ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் அரை கப் தேங்காய் பால் சேர்க்க வேண்டும்.
இதனுடன் 1 அல்லது 2 டீஸ்பூன் கிளிசரின் மற்றும் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்க வேண்டும்.
இதில் 4-5 சொட்டு ரோஸ்மேரி அத்தியாவசிய எண்ணெய் அல்லது லாவண்டர் எண்ணெய் மற்றும் தேயிலை மர எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
இப்பொழுது இதை ஒரு கொள்கலனில் மாற்றி குளிர் சாதன பெட்டியில் வைத்து குளிர்வித்து பிறகு இதை மாய்ஸ்சரைசராக பயன்படுத்தி வரலாம்.
தேங்காய் பாலை மாய்ஸ்சரைசராக பயன்படுத்தி வர சருமத்தை மென்மையாக உதவுகிறது.
தேங்காய்ப்பாலின் நன்மைகள்
தேங்காய் பால் உடலில் வீக்கத்தைக் குறைக்கவும் சருமத்தை ஆற்றவும் பயன்படுகிறது. மேலும் தோலழற்சி போன்ற தோல் நோய்களை விரட்ட உதவுகிறது.
தேங்காய் பாலில் வைட்டமின்களான சி, ஈ, பி1, பி3, பி5 மற்றும் பி6 மற்றும் இரும்பு, செலினியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.
இது சருமத்திற்கு நல்ல நிறத்தையும், கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
தேங்காய் பாலில் காணப்படும் ஆரோக்கியமான புரதங்கள் முடியை வலுப்படுத்த உதவுகிறது.
மேலும் தேங்காய் பாலில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் சருமத்தை ஹைட்ரேட் செய்ய உதவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |