முழங்கால் வரை முடி வளர செய்யும் கறிவேப்பிலை சீரம் - வீட்டிலேயே செய்வது எப்படி?
பொதுவாகவே அனைவருக்கும் தங்களது முடியை நீளமாகவும் அடர்தியாகவும் வளர்க்க வேண்டும் என்ற ஆசை உண்டு. அதற்காக கூந்தலுக்கு பல்வேறு பொருட்களைப் பயன்படுத்த நேரிடுகிறது.
இதற்கு சந்தையில் கிடைக்கும் பொருட்களையே அடிக்கடி மக்கள் பயன்படுகின்றார்கள். ஆனால் பாட்டி வைத்தியம் குறித்து எப்போதாவது ஆராய்ந்து பார்த்து இருகின்றீர்களா?
இது முடிக்கு இயற்கையான ஊட்டச்சத்தை அளிக்கிறது. அந்தவகையில் தலை முடிக்கு ஊட்டமளிக்கும் கறிவேப்பிலை வைத்து எப்படி வீட்டிலேயே சீரம் செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
கூந்தலுக்கு கறிவேப்பிலையின் நன்மைகள்
கறிவேப்பிலையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இரும்புச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் போன்ற பல சத்துக்கள் உள்ளன. இது முடியை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. கறிவேப்பிலை முடி உதிர்வு பிரச்சனையையும் குறைக்கிறது. எனவே இதை உங்கள் தலைமுடியில் எளிதாகப் பயன்படுத்தலாம்.
கறிவேப்பிலை சீரம்
தேவையானவை
- புதிய கறிவேப்பிலை
- தண்ணீர் - 2 கப்
-
அலோ வேரா ஜெல் - 1 தேக்கரண்டி
- தேங்காய் எண்ணெய் - 5 முதல் 6 சொட்டுகள்
சீரம் செய்வது எப்படி?
- இதற்கு முதலில் கறிவேப்பிலையை நன்கு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்ய வேண்டும்.
- இப்போது கறிவேப்பிலையை 2 கப் தண்ணீரில் நன்கு கொதிக்க வைக்கவும்.
- தண்ணீர் ஆறியதும் வடிகட்டவும்.
- அதன் பிறகு, அதில் கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெய் கலக்கவும்.
- இந்த சீரம் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சேமிக்கவும்.
எப்படி பயன்படுத்தலாம்?
தலைமுடியில் தடவுவதற்கு, முதலில் ஷாம்பூவுடன் உங்கள் தலைமுடியை சுத்தம் செய்யவும்.
பின்னர் அதை உங்கள் கைகளில் எடுத்து உச்சந்தலையில் நன்றாக மசாஜ் செய்யவும்.
இதை இரவு தூங்கும் முன் உங்கள் தலைமுடியில் தடவவும்.
இது முடிக்கு நல்ல ஊட்டச்சத்தையும் அளிக்கும்.
நீங்கள் விரும்பினால், ஸ்டைலிங் கருவிகளைப் பயன்படுத்தும் போது அதைப் பயன்படுத்தலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |