ஒரே இரவில் உங்கள் முகம் ஜொலிக்கணுமா? அப்போ இதை கண்டிப்பா ட்ரை பண்ணுங்க..
அழகு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. குறிப்பாக பெண்கள் அழகாக இருக்க எந்த அளவிற்கு வேண்டுமென்றாலும் செல்வார்கள்.
லட்ச லட்சமாக செலவு செய்து அழகு சாதனை பொருள்களை மலை போல் குவித்து வைத்திருப்பார்கள். கெமிக்கல் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் பொருள்களை பயன்படுத்தி முக பொலிவு அடைய செய்யலாம்.
முகம் பொலிவு அடைய என்ன செய்ய வேண்டும்:-
முகத்தை சோப்பு கொண்டு கழுவிய பிறகு, பாதாம் எண்ணெய்யை முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்தால் முகம் உடனே பொலிவு அடையும்.
காய்ச்சாத பச்சை பாலை முகத்தில் தேய்த்து வந்தால் முகத்தில் உள்ள கருமைகள் மாயமாக மறைந்துவிடும்.
முகத்தில் தினமும் இரவு கற்றாழையை 10 நிமிடம் மசாஜ் செய்து காலையில் முகத்தை கழுவினால் முகம் மென்மையாக இருக்கும்.
முல்தானி மெட்டியுடன் சிறிதளவு தேன் சேர்த்து முகத்தில் ஃபேஸ் மாஸ்க் மாதிரி போட்டு 20-30 நிமிடம் ஊற வைத்தல் சுத்தமான அழகிய முகத்தை பெறலாம்.
இரவு தூங்கும் முன் மஞ்சள் தூள், சந்தனம், ரோஸ் வாட்டர் போன்றவை கலந்து முகத்தில் தேய்த்து கழுவினால் முகம் பளிச்சுன்னு மின்னும்.