வீட்டிலேயே Face Wash செய்யனுமா? இந்த முறையில் செய்து பாருங்க
பொதுவாகவே ஆண்களை விட பெண்கள் தான் தனது சருமத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
வீட்டில் ஒவ்வொரு பொருட்களை வைத்து ஒவ்வொரு முறையில் தனது சருமத்தை பொலிவாக்க முயற்சி எடுப்பது வழக்கம்.
முதலில் சருமத்தை பாதுகாப்பதற்கு தூசி, வியர்வை, அழுக்கு மற்றும் பாக்டீரியாக்களை சருமத்தில் இருந்து நீக்க வேண்டும்.
அதற்கு கடைகளில் இருந்து Face pack என ஒவ்வொரு பொருட்களை வாங்கி பயன்படுத்தாமல் வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்து எப்படி இலகுவான முறையில் Face Wash செய்யலாம் என இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
தயிர் மற்றும் தேன்
ஒரு பாத்திரத்தில் 2 தே.கரண்டி தயிர், 1 தே.கரண்டி தேன் சேர்த்து, நன்றாக கலந்து முகத்தில் தடவி, 3 நிமிடங்கள் வரை வைத்திருந்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பொலிவாக இருப்பதோடு ஆரோக்கியமாகவும் இருக்கும்.
தேன் மற்றும் முட்டை
முட்டையில் மஞ்சள் கரு மற்றும் தேன் சேர்த்து, 3 பாதாமை தோல் உரித்து மென்மையாக பேஸ்ட் ஆக்கி, அந்த கலவையுடன் கலந்து முகத்தில் பூச வேண்டும். பிறகு முகத்தை கழுவினாால் வறண்ட சருமம் பொலிவாக மாறும்.
தயிர் மற்றும் ஸ்ட்ராபெர்ரி க்ளென்சர்
முதலில் ஸ்ட்ராபெர்ரி மற்றும் தயிரை மென்மையான பதத்திற்கு கலந்து, பிறகு முகத்தில் தடவி மசாஜ் செய்து, 7 நிமிடங்களின் பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
பால் மற்றும் தேன்
காய்ச்சி எடுக்காத பால் 2 தே.கரண்டி மற்றும் 1 தே.கரண்டி தேன் சேர்த்து நன்றாக கலந்து எடுக்க வேண்டும். பிறகு இதை சருமம் முழுக்க தடவி மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
அன்னாசிப்பழம் மற்றும் எலுமிச்சை சாறு
அன்னாசிப்பழத்துண்டுகளை மசித்து எடுத்து அதில் 1 தே.கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து முகம் முழுவதும் 5 நிமிடங்கள் தடவி, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
கடலை மாவு
2 டீஸ்பூன் கடலை மாவில் பால், தயிர் மற்றும் பாலேடு சேர்த்து நன்றாக கலந்து மசாஜ் செய்து, கயாந்த பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |