முடி உதிர்வைக் குறைக்க உதவும் வெந்தயம் ஹேர் மாஸ்க்.., வீட்டிலேயே எப்படி தயாரிப்பது?
How to make fenugreek hair mask at home- இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை பலரும் முடி உதிர்வு மற்றும் முடி வளர்ச்சியின்மை பிரச்சனையை சந்திக்கின்றனர்.
இதற்காக பலரும் விலையுயர்ந்த ஹேர் சீரம்கள், ஹேர் மாஸ்க்குகள் மற்றும் பல்வேறு சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்.
ஆனால், முடி ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும் சில இயற்கையான பொருட்கள் நம் சமையலறையிலேயே உள்ளன.
அந்தவகையில், வீட்டில் உள்ள வெந்தயத்தை பயன்படுத்தி வீட்டிலேயே ஹேர் மாஸ்க் தயாரிக்கலாம்.
வெந்தயத்தில் இரும்புச்சத்து, புரதம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை முடியின் ஆரோக்கியத்திற்கு உதவக்கூடிய ஊட்டச்சத்துக்களாகும்.
தேவையான பொருட்கள்
- வெந்தயம்- 2 ஸ்பூன்
- தண்ணீர்- தேவையான அளவு
- தயிர்- 2 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.
அடுத்து மறுநாள் வெந்தயத்தில் உள்ள தண்ணீரை வடிகட்டி, மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும்.

பின் அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து முடி மற்றும் உச்சந்தலையில் தடவ வேண்டும்.
இதற்கடுத்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருந்து வெதுவெதுப்பான நீரில் முடியை நன்றாகக் கழுவி, மென்மையான ஷாம்புவைப் பயன்படுத்திச் சுத்தம் செய்ய வேண்டும்.
இந்த ஹேர் மாஸ்க், வறண்ட கூந்தலை மென்மையாக்கவும், முடியின் அமைப்பை மேம்படுத்தவும் உதவக்கூடும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |