வெந்தயக்கீரை புலாவ் செய்வது எப்படி?
Tomato
Green Chilli
Onion
Potato
Healthy Food Recipes
By Kirthiga
தினமும் கீரை சாப்பிடுவது நல்லது. ஆனால் கீரையை பெருமளவில் யாரும் விரும்பி உண்ண மாட்டார்கள். ஆகவே கீரையில் உள்ள நன்மைகள் யாருக்கும் விளங்குவதில்லை.
கீரை சாப்பிடுவதால் உடல் ரீதியாக பல நன்மைகள் ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மற்றும் முடி வளர்ச்சிக்கு உதவும்..
ஆகவே கீரையை எவ்வாறு புதுவிதமாக செய்து சாப்பிடலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
-
பாசுமதி அரிசி - ஒரு கப்
- வெந்தயக்கீரை- ஒரு கப்
- வெங்காயம் - 1 பெரியது
-
உருளைக்கிழங்கு - 2
- பச்சை மிளகாய் - 3
- பிரிஞ்சி இலை - 1
- இஞ்சி-பூண்டு விழுது - 1 தே.கரண்டி
- நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
-
வெங்காயத்தை நீளவாக்கில் வெட்ட வேண்டும்.
-
உருளைக்கிழங்கை வேக வைத்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
- வெந்தயக்கீரையை பொடியாக வெட்டிக் கொள்ளவும். அரிசியை கழுவி 10 நிமிடம் ஊற வைத்து, நெய்யில் வறுத்துத்தெடுக்க வேண்டும்.
-
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின்னர் பச்சை மிளகாய்,வெங்காயம் சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும்.
- வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
-
பிறகு, வெந்தயக்-கீரை போட்டு வதக்கி பின் வேக வைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும்.
- இறுதியாக அதில் அரிசியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு 15 நிமிடத்தில் எடுத்தால் சூப்பரான வெந்தயக் கீரை புலாவ் தயார்!!
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US