கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: திராட்சை ஒயினை வீட்டிலேயே செய்வது எப்படி? வாங்க தெரிந்து கொள்வோம்!
நாம் தினமும் முறையான உடற்பயிற்சி, டயட் உடன், மிகக் குறைந்த அளவு ரெட் ஒயின் குடிப்பதால் இதயம் சம்பந்தபட்ட நோய்கள் ஏற்படாது. இப்படி செய்வதால் சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பே இல்லை.
மேலும் இது புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது என்று ஆய்வில் வெளியாகியுள்ளது. சரி வாங்க வீட்டிலேயே திராட்சை ஒயின் செய்வது குறித்து பார்க்கலாம் வாங்க..
தேவையான பொருள்கள்:-
சுடுதண்ணீர்
திராட்சை பழம்
சர்க்கரை
பட்டை
கிரம்பு
ஈஸ்ட்
முளை கட்டிய கோதுமை
செய்முறை:
முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைத்து தண்ணீரை சுடாக்க வேண்டும். திராட்சைப் பழத்தினை நன்கு கழுவி சுத்தமான மெல்லிய துணியில் ஈரம் நீக்கி துடைக்கவும். பின்னர் ஒரு ஜாடியை சுத்தப்படுத்தி நன்கு உலர்ந்த திராட்சை பழத்தை அதில் போட்டு மத்து வைத்து நசுக்கி விட வேண்டும்.
அதில் ஆற வைத்த தண்ணீர், சர்க்கரை சேர்த்து ஒரு துணியில பட்டை, கிரம்பு சிறு பொட்டலமாக கட்டி அதனுடன் போடவும். அதில் நான்கு நாள் கழித்து ஈஸ்ட் சேர்க்கவும். பின்னர் முளை கட்டிய கோதுமையை சிறிதளவு சேர்க்க வேண்டும்.
அத்துடன் 30 நாட்கள் கழித்து மிண்டும் கிளறவும். அதன் பிறகு 45 நாட்கள் கழித்து வடிகட்டி பாட்டிலில் ஊற்றி வைத்து தினமும் குடிக்கலாம். வீட்டிலேயே தயாரித்த திராட்சை ஒயின் தயார்.