வறண்ட முடியை பட்டுப்போல் மாற்ற வேண்டுமா? இதை செய்தாலே போதும்!
hair problems
By Kishanthini
பொதுவாக கூந்தலுக்கு அழகு சேர்க்கும் இயற்கை பொருள்கள் நம்மை சுற்றி நிறைந்துள்ளன.
முடியின் மென்மையை அதிகரிக்க உதவும் எண்ணற்ற பொருள்களில் கேரட், வாழைப்பழமும் ஒன்று.
இதனை வைத்து வறண்டு போன கூந்தலை கூட எளிய முறையில் சரி செய்யலாம். அது எப்படி என இங்கு பார்ப்போம்.
தேவையானவை
- கேரட்- 1
- வாழைப்பழம்- 1
- தயிர் - 2 டீஸ்பூன்
செய்முறை
- கேரட்டை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இதை ப்ளெண்டரில் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும். பிறகு வாழைப்பழத்தை மசித்து அதையும் ப்ளெண்டரில் சேர்த்து நன்றாக மசித்து எடுக்கவும். பிறகு தயிர் சேர்த்து பேஸ்ட் போல் குழைத்து கூந்தல் முழுக்க தடவி எடுக்கவும்.
- கூந்தலை சுத்தம் செய்து நன்றாக அலசி எடுக்க வேண்டும். கூந்தலை சிக்கில்லாமல் சீவி பகுதி பகுதியாக பிரித்து அதில் பேஸ்ட்டை தடவி விடவும். நன்றாக முடியின் மயிர்க்கால்கள் முதல் நுனி வரை தடவி எடுக்கவும். பிறகு கூந்தலுக்கு ஹேர் கவர் அணிந்து விடவும்.
- 30 முதல் 45 நிமிடங்கள் வரை கழித்து கூந்தலை மைல்டான ஷாம்பு அல்லது வெற்று நீரில் அலசி எடுக்கவும்.. வாரம் ஒருமுறை இதை செய்து வரலாம்.
- கூந்தலுக்கு ஹேர் மாஸ்க் போடும் போது கூந்தலை அழுக்கு நீங்க நன்றாக அலசிய பிறகு போட வேண்டும். அப்போதுதான் ஹேர் மாஸ்க் பலன் அளிக்கும். இந்த ஹேர் மாஸ்க் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தலாம்.
- வாரம் ஒரு முறை பயன்படுத்தி வந்தால் விரைவில் கூந்தல் பளபளப்பாவதை பார்க்கலாம். இது கூந்தலை ஆரோக்கியமாக அடர்த்தியாக்கும். பளபளப்பாக்கும். மென்மையாக்கும்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US