அடர்த்தியான முடிக்கு 11 மூலிகை கொண்ட Herbal Hair Oil: எப்படி தயாரிப்பது?
அனைத்து மனிதர்களுக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை முடி உதிர்வு தான். முடி ஒருவரை அழகாகவும் இனிமையாகவும் காட்டக்கூடியது.
ஆனாலும் பலரும் முடிக்காக நேரமும் பணமும் செலவிட யோசிப்பதில்லை.
இன்னும் சிலர் பிறரின் ஆலோசனைகளை கேட்டு செலவு செய்து கண்ட எண்ணெய்களை வாங்கி பயன்படுத்தி முடியை இழக்கிறார்கள்.
Shutterstock
தேவையான பொருட்கள்
- கற்றாழை ஜெல்- 3 டீஸ்பூன்
- கரிசலாங்கண்ணி இலை- 1 கைப்பிடி
- செம்பருத்தி இலை- 1 கைப்பிடி
- வேப்பிலை- 1/2 கைப்பிடி
- செம்பருத்தி பூ- 1 கைப்பிடி
- கருவேப்பிலை- 1 கைப்பிடி
- மருதாணி- 1 கைப்பிடி
- வெந்தயம்- 5 டீஸ்பூன்
- கருஞ்சீரகம்- 3 டீஸ்பூன்
- பெரிய நெல்லிக்காய்- 2
- அவுரி பொடி- 2 டீஸ்பூன்
செய்முறை
ஒரு பெரிய இரும்பு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் நன்கு காயவிடவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் கற்றாழை ஜெல்- 3 டீஸ்பூன் கரிசலாங்கண்ணி இலை, செம்பருத்தி இலை, வேப்பிலை, செம்பருத்தி பூ, கருவேப்பிலை, மருதாணி, வெந்தயம், கருஞ்சீரகம், பெரிய நெல்லிக்காய், அவுரி பொடி ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த கலவையை காய்ந்த தேங்காய் எண்ணெயில் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
ஒரு 5-7 நிமிடம் கொதித்த பின்பு இறக்கி ஆறவிடவும்.
எண்ணெய் நன்கு ஆறியதும் வடிகட்டி ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்து பயன்படுத்தி வந்தால் முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி நீளமாகவும் அடர்த்தியாகவும் முடி வளரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |