வீட்டிலேயே மூலிகை ஷாம்பு செய்வது எப்படி?
கடைகளில் விற்கப்படும் ஷாம்பூக்களில் அதிகளவு இரசாயனங்கள் கலக்கப்படுவதால் முடிஉதிர்வு, பொடுகு போன்ற பிரச்சனைகள் வரக்கூடும்.
இரசாயனங்கள் அற்ற இயற்கை முறையிலான ஷாம்பூவை பயன்படுத்தினால் மட்டுமே முடி உதிர்வு, பொடுகு பிரச்சனைகளில் இருந்து நம் முடி ஆரோக்கியமாக வளரும்.
அவ்வாறு ஆரோக்கியமுறையிலான இயற்கை ஷாம்பூவை நம் வீட்டிலே எளிதாக தயாரிக்கலாம்.
ஆலிவ் விதைகளை தண்ணீரில் நன்றாக சுண்ட கொதிக்க விடும்போது , அதிலிருந்து நுரைகள் பொங்கி வரும் அந்த நுரைகளை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும்.
பின் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சோப்பு கொட்டைகளை வாங்கி தண்ணீரில் ஊறவைத்தால் அதிலிருந்து வரும் நுரைகளை பயன்படுத்தி ஷாம்பூ தயாரிக்கலாம். மேலும் இதில் சோப்பும் தயாரிக்கலாம்.
ஆலிவ் விதைகளின் நுரைகளையும், சோப்புகொட்டைகளின் நுரைகளையும் சேர்த்து, ஷாம்பு போன்று தலைதேய்த்து குளித்தல் முடி கொட்டுவதை தடுக்கும் , ஆரோக்கியமாக முடி வளரும்.
இந்த இயற்கை முறை ஷாம்பூவை ரொம்ப நாட்களுக்கு பயன்படுத்த முடியாது ,பிரிட்ஜ் ல் வைத்து ஒரு வரம் வரை பயன்படுத்தலாம்.
மேலும் சூடான நீரில் தலைக்கு குளிப்பதை விட மிதமான குளிர்ந்த நீரில் தலைக்கு குளிப்பது முடியின் ஆரோக்கியத்திற்கு உதவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |