பெண்களின் கண்களை வசீகரமாக்கும் கண் மை.., இயற்கை முறையில் தயாரிக்கலாம்
வசீகரமாக்கும் கண்களோடு வலம் வரும் பெண்களை மிகவும் அழகாக காட்டுவதில் கண் மைகளுக்கு ஈடாக எதுவும் இருக்காது.
கடைகளில் விற்கப்படும் ரசாயனம் கலந்த மஸ்காரா, காஜல், ஐ லைனர் போன்றவை சில பெண்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துகிறது.
இனி அந்த கவலை வேண்டாம். வீட்டிலேயே இயற்கையான முறையில் கண் மைகளை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- விளக்குகள் - 2
- விளக்கெண்ணெய்- தேவையான அளவு
- தடினமான திரி - 2
- எவர்சில்வர் தட்டு - 1
- சில்வர் டம்ளர் - 2
தயாரிக்கும் முறை
முதலில் இரண்டு விளக்குகளை ஏற்றி அதற்கு பக்கவாட்டில் இரண்டு டம்ளர்களை வைத்து அதன் மேல் தட்டு வைத்து விளக்கை சுமார் 1 மணி நேரம் எரியவேண்டும்.
பின்னர் விளக்கை அணைத்து தட்டு சூடு ஆறியதும் தட்டில் படிந்திருக்கும் கரியை சேகரித்து ஒரு பவுலில் போடவும்.
எடுத்து வைத்துள்ள கரித்துகளில் விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு பசைபோல் குழைத்தால் இயற்கையான கண் மை தயார்.
விளக்கெண்ணெய் வைத்து தயார் செய்யும் இந்த கண் மை கண்களுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடும், குழந்தைகளுக்கு கூட இதனை பயன்படுத்தலாம்.
இந்த முறையில் சில்வர் தட்டுக்கு பதிலாக தேங்காய் சிரட்டைகளை கொண்டும் கண் மை தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்
- கரிசலாங்கண்ணி பொடி - 1 ஸ்பூன்
- அகல் விளக்குகள் - 2
- பஞ்சு திரி - 4
- விளக்கெண்ணெய் - தேவையான அளவு
தயாரிக்கும் முறை
ஒரு பாத்திரத்தில் கரிசலாங்கண்ணி பொடியை தண்ணீரில் கலக்கிக் கொள்ளவும். பின்னர் அதனுள் பஞ்சு திரியை நனைத்து உலர விட வேண்டும்.
பின்னர் 2 அகல் விளக்குகளை நேர் எதிராக வைத்து உலர்ந்த திரி கொண்டு விளக்கு ஏற்றவும். அதில் தட்டு அல்லது தேங்காய் சிரட்டையை கவிழ்த்தி வைக்கவும்.
கரி படிந்த பின்பு விளக்கை அணைத்து, சூடு ஆறியதும் புகைக்கரியை தனியாக எடுத்துக்கொள்ளவும்.
இதையடுத்து ஒரு சிறிய பவுலில் மாற்றி விளக்கெண்ணெய் ஊற்றி கலந்து வைத்தால், கண்களைப் பாதுகாக்கும் கண் மை தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |