சளி, இருமலுக்கு நிரந்தர தீர்வு தரும் ''கதா பானம்''.. வீட்டிலேயே தயாரிக்கலாம்
இந்திய பாரம்பரிய பானமான கதா, ஒரு தேநீராக அருந்தப்படுகிறது. இந்த பானம் பருவகால காய்ச்சலை விரட்ட பயன்படுகிறது.
இந்த கதா பானத்தை மூலிகைகள் மற்றும் மசாலா பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது.
இதனை எப்படி தயார் செய்வது என்றும், இதனை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தண்ணீர்- 2 கப்
- இஞ்சி- 1 துண்டு
- கிராம்பு- 5
- கருப்பு மிளகு- 6
- துளசி இலைகள்- 6
- தேன்- ½ ஸ்பூன்
- இலவங்கப்பட்டை- 2 துண்டு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
பின் கொதிக்கின்ற தண்ணீரில் இஞ்சி, கிராம்பு, கருப்பு மிளகு மற்றும் இலவங்கப்பட்டை ஆகியவற்றை நசுக்கு சேர்க்கவும்.
பின்னர் துளசி இலைகளை சேர்த்து மிதமான வெப்பத்தில் கொதிக்க விடவும்.
தண்ணீர் பாதியாக வத்தியதும் வடிகட்டி தேன் சேர்த்து அருந்துங்கள்.
கிடைக்கும் நன்மைகள்
கதா பானத்தில் ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதனால் பருவகால நோய்கள் வராமல் தடுக்க முடியும்.
குறிப்பாக குளிர்காலத்தில் இந்த பானத்தை தினமும் அருந்தி வந்தால் குளிர்காலத்தில் ஏற்படும் இருமல், சளி பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்.
மேலும் இதை குடித்து வர வறட்டு இருமல் சரி செய்யும் மற்றும் நாள்பட்ட இருமல் கூட சரியாகும்.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. மேலும் நாள் முழுவதும் நீரேற்றமாக வைத்து கொள்ள உதவுகிறது.
இந்த பானம் உடலை சுத்தப்படுத்த உவுகிறது. இதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவது மட்டுமின்றி, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் துணை புரிகிறது.
இந்த கதா பானத்தில் மஞ்சள் தூள் சேர்த்து அருந்துவதால், குளிர்காலத்தில் ஏற்படும் மூட்டு பிரச்னைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |