கட்டுக்கடங்காத முடி வளர்ச்சிக்கு கறிவேப்பிலை இட்லி பொடி: எப்படி செய்யலாம்?
பொதுவாகவே அனைவருக்கும் தங்களது முடியை அழகாகவும் நீளமாகவும் ஆரோக்கியமாகவும் வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால் குறிப்பிட்ட ஊட்டச்சத்து குறைப்பாட்டால் முடியை பராமரிக்க முடிவதில்லை. பெருமளவில் முடி வளர்ச்சிக்கு உதவுவது கறிவேப்பிலை தான்.
அந்தவகையில் கறிவேப்பிலை வைத்து எப்படி இட்லி பொடி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
அனைவரும் காலை உணவாக தினமும் எடுத்துக்கொள்வது இட்லி அல்லது தோசை தான். எனவே அதனுடன் சேர்த்து சாப்பிடக் கூடிய பொடிகளை வைத்து எப்படி உடல் தேவையை பூர்த்தி செய்யலாம் என தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- கறிவேப்பிலை - 1 கப்
- கடலைப்பருப்பு - 3 மேசைக்கரண்டி
- உளுத்தம்பருப்பு - 3 மேசைக்கரண்டி
- தனியா - 2 மேசைக்கரண்டி
- சீரகம் - 1 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - 8
- புளி
- பூண்டு - 5 பற்கள்
- கல் உப்பு - 1 தேக்கரண்டி
- பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி
- நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
- இட்லி
- கறிவேப்பிலை பொடி - 1 மேசைக்கரண்டி
- நெய் - 1 தேக்கரண்டி
செய்முறை
1. ஒரு பானில் கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, சேர்த்து வறுக்கவும்.
2. பருப்பு பொன்னிறம் ஆகும்வரை வறுத்து, அதில் தனியா, சீரகம், காய்ந்த மிளகாய், புளி, பூண்டு,கறிவேப்பிலை, சேர்த்து குறைந்த தீயில் வறுக்கவும்.
3. பிறகு கறிவேப்பிலை வறுபட்டதும் கல் உப்பு, பெருங்காய தூள், சேர்த்து கொள்ளவும்.
4. அடுத்து கறிவேப்பிலை கலவையை மிக்ஸியில் போட்டு தூள் ஆக அரைக்கவும்.
5. ஒரு கிண்ணத்தில் மாற்றி வைக்கவும்.
6. ஒரு பானில் எண்ணெய் ஊற்றி அதில் மினி இட்லி சேர்த்து கலந்து விடவும்.
7. அடுத்து கறிவேப்பிலை பொடி சேர்த்து கலந்து விடவும்.
8. இறுதியில் நெய் சேர்த்து கலந்து எடுத்தால் சுவையான கறிவேப்பிலை இட்லி பொடி தயார்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |