இதை தடவினால் போதும்...! சூப்பரா உங்கள் உதடு சிவப்பாக மாறிடும்
Skin Care
Beauty
By Kirthiga
பொதுவாகவே அனைவருக்கும் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே இருக்கும். அதிலும் உதட்டை அழகாக வைத்துக்கொள்வதில் அதீத கவனத்தை காட்டுவார்கள்.
உங்கள் உதடுகளை நீரேற்றமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது மிக முக்கியம். உங்கள் உதடுகள் மென்மையாகவும், இளஞ்சிவப்பு நிறமாகவும் இருப்பதற்கு கூடிய கவனத்துடன் இருக்க வேண்டியது மிக அவசியம்.
சிலருக்கு உதடு வறண்டு போய் காணப்படுவதுண்டு. உதடுகள் வறண்டு விடாமல் அவற்றை பளபளப்பாக வைத்திருக்க லிப் ஆயில் பூச வேண்டும்.
இதை எப்படி இலகுவான முறையில் வீட்டிலேயே செய்யலாம் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
-
கோகோ எண்ணெய் - அரை தேக்கரண்டி
- வர்ஜின் தேங்காய் எண்ணெய் - அரை தேக்கரண்டி
-
ஆலிவ் எண்ணெய் - 1 தேக்கரண்டி
-
லாவண்டர் எண்ணெய் - 5 துளிகள்
- ஆரஞ்சு எண்ணெய் - 5 துளிகள்
- தேன் மெழுகு (பீஸ் வாக்ஸ்) - அரை தேக்கரண்டி
-
வைட்டமின் இ டேப்ளட்ஸ் - 5
- லிப் ஆயில் டியூப் - 3
- ரோஸ் பவுடர் - 1 டீஸ்பூன்
செய்முறை
-
ஒரு கண்ணாடி பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், கோகோ எண்ணெய் மற்றும் தென் மெழுகு போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- அடுத்து அகலமான ஒரு பாத்திரத்தை எடுத்து, அதில் கண்ணாடி பாத்திரத்தை வைத்து நீரில் மூழ்காதவாறு வைக்க வேண்டும்.
- பின் இதை இதமாக சூடேற்றவும். இவ்வாறு செய்யும் போது கண்ணாடி கிண்ணத்தில் உள்ளவை உருகும்.
- இதில் தேன் மெழுகு உருக விட வேண்டும். லிப் ஆயில் ஊற்றும் போது அது இறுக்கமாகி அடியில் தங்கி விடக்கூடும். இவ்வாறு 10 முதல் 15 நிமிடங்கள் வரை சூடேற்றவும்.
- வைட்டமின் இ மாத்திரைகளை இந்த கலவையில் சேர்த்துக்கொள்ளவும்.
- எண்ணெயுடன், வைட்டமின் இ பிழிந்ததும் லிப் ஆயில் தயாராகி விடும்.
- அதில் ரோஸ் பவுடர் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
- அடுத்து லிப் ஆயிலை ஒரு டியூப்பில் ஊற்றி 30 நிமிடங்களுக்கு குளிர்ச்சிப்படுத்தவும்.
- இறுதியாக இதை உதட்டிற்கு பயன்படுத்தி வரலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US