மென்மையான உதட்டைப் பெற லிப் ஆயில் : வீட்டிலேயே செய்வது எப்படி?
பொதுவாகவே அனைவருக்கும் தங்களது சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதீத ஆசை இருக்கும். அதற்காக வீட்டில் இருந்துக்கொண்டே பல விடயங்களை முயற்சி செய்து பார்ப்பதும் உண்டு.
சருமத்திற்கு தரும் அதே அக்கரையை உதட்டிற்கும் கொடுக்க வேண்டும். காரணம், ஒருவரின் அழகை வெளியில் காட்டுவது சிரிப்பு தான். அந்த சிரிப்பிற்கு முக்கியமாக இருப்பது உதடு. ஆகவே உதட்டை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும்.
சிலருக்கு உதடு வறண்டு போய் இருக்கும். உதடுகள் வறண்டு விடாமல் அவற்றை பளபளப்பாக வைத்திருக்க பல முயற்சிகளை செய்யலாம். அதில் ஒன்று தான் லிப் ஓயில்.
இதை எப்படி இலகுவான முறையில் வீட்டிலேயே செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையானவை
-
கோகோ எண்ணெய் - அரை தேக்கரண்டி
- வர்ஜின் தேங்காய் எண்ணெய் - அரை தேக்கரண்டி
- ஆலிவ் எண்ணெய் - 1 தேக்கரண்டி
- லாவண்டர் எண்ணெய் - 5 துளிகள்
- ஆரஞ்சு எண்ணெய் - 5 துளிகள்
-
தேன் மெழுகு (பீஸ் வாக்ஸ்) - அரை தேக்கரண்டி
- வைட்டமின் இ டேப்ளட்ஸ் - 5
லிப்
- ஆயில் டியூப் - 3
- ரோஸ் பவுடர் - 1 டீஸ்பூன்
செய்முறை
- முதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், கோகோ எண்ணெய் மற்றும் தென் மெழுகு என்ணெய் சேர்த்துக்கொள்ளவும்.
- அடுத்து அகலமான பாத்திரம் ஒன்றை எடுத்து கண்ணாடி கிண்ணத்தை வைக்க வேண்டும். நீரில் மூழ்காதவாறு இருக்க வேண்டும்.
- அதை சூடேற்றவும். கண்ணாடி கிண்ணத்தில் உள்ளவை உருகும்.
- இவ்வாறு 10 முதல் 15 நிமிடங்கள் வரை சூடேற்றினால் போதும். அனைத்தும் உருகி விடும்.
- அடுத்து வைட்டமின் இ மாத்திரைகளின் சேர்த்துக்கொள்ளவும்.
- பின் அடுப்பில் இருந்து இறக்கி, ரோஸ் பவுடர் சேர்த்துக் கலக்க வேண்டும்.
- இறுதியாக லிப் ஆயில் டியூப்பில் ஊற்றி 30 நிமிடங்கள் வரை குளிர்ச்சிபடுத்தவும்.
- இதை வறட்சியான உதட்டின் மூலம் பூச வேண்டும். அதனால் வறட்சி நீங்கி அழகான மற்றும் மென்மையான உதடு வரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |