நரை முடியை கருப்பாக மாற்றும் இயற்கை டை: எப்படி தயாரிப்பது?
ஆண், பெண் என இருவருக்கும் முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.
இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.
நரை முடியை கருப்பாக மாற்ற கடைகளில் விற்கப்படும் ரசாயனம் கலந்த ஹேர் டை போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
எனவே இயற்கையாக நம் வீட்டிலேயே டை தயாரித்து பயன்படுத்துவதால் ஆரோக்கியமான கருமையான கூந்தலை பெறலாம்.
மருதாணி
மருதாணி பொடியை வெந்நீரில் கலந்து பேஸ்ட்டை உருவாக்கவும். இதை தலைமுடியில் தடவி ஓரிரு மணி நேரம் அப்படியே வைக்கவும். பின்பு தலைமுடியை சுத்தம் செய்யலாம்.
இந்த மருதாணி பேஸ்ட் தலைமுடிக்கு சிவப்பு-ஆரஞ்சு நிறத்தை கொடுக்கும்.
காபி
காபியை நன்றாக காய்ச்சி ஆறியபின்பு அதை தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு தலைமுடியை அலசிவிடலாம்.
காபி தலைமுடிக்கு செழுமையான, அடர் பழுப்பு நிறத்தை அளிக்கும்.
பீட்ரூட்
பீட்ரூட்டை வேகவைத்து ஜூஸ் தயாரித்து ஆறவிடவும். இதை தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். பின்பு தண்ணீரில் கழுவவும்.
பீட்ரூட் சாறு தலைமுடிக்கு சிவப்பு-ஊதா நிறத்தை கொடுக்கும்.
வால்நட் கொட்டை
கருப்பு வால்நட் கொட்டை ஓடுகளை பொடித்து தண்ணீரில் கொதிக்க வைக்கவும். அதை ஆற வைத்து தலைமுடியில் தடவவும். ஒரு மணி நேரம் கழித்து தண்ணீரில் கழுவவும்.
கருப்பு வால்நட் கொட்டை தலைமுடிக்கு அடர் பழுப்பு நிறத்தை கொடுக்கும்.
கேரட்
கேரட்டை வேகவைத்து, சாறு எடுத்துக்கொள்ளவும். இதை தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்துவிட்டு தண்ணீரில் கழுவவும்.
கேரட் சாறு தலைமுடிக்கு சிவப்பு-ஆரஞ்சு நிறத்தை அளிக்கும்.
இங்கே இடம் பெற்றுள்ள ஏதாவது ஒரு பொருளை தொடர்ந்து பயன்படுத்தி வர, நரை முடி மறைந்து இயற்கை வண்ண சாயத்துடன் கூந்தல் மிளிரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |