எலி வால் போல் முடி இருக்கா? நீளமான கூந்தலுக்கு உதவும் எண்ணெய்: எப்படி தயாரிப்பது?
பெண்களின் தலைமுடி என்பது எப்பொழுதும் ஒரு தனி அழகுதான். ஆனால் பல பெண்களுக்கு முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பல பிரச்சனைகள் இருக்கும்.
தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
அந்தவகையில், முடி உதிர்தல் பிரச்சனையை அடியோடு நிறுத்தி அடர்தியான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடுகு எண்ணெய்
- வெங்காய சாறு
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கடுகு எண்ணெயை முடியின் நீளத்திற்கு ஏற்ப எடுக்கவும்.
அதில் 1 வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து இரண்டையும் நன்றாகக் கலக்கவும்.
எண்ணெயை விரல்களால் உச்சந்தலையில் இருந்து முடியின் நீளம் வரை நன்கு தடவவும்.
தலைமுடியைக் கழுவுவதற்கு 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன் இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம்.
பின் மென்மையான ஷாம்பு மற்றும் கண்டிஷனர் உதவியுடன் தலைமுடியில் உள்ள எண்ணெயை அகற்றவும்.
இதனை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் முடி விரைவில் நீளமாக வளரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |