சரும பிரச்சனைகளை நீக்க வேப்பிலை சோப்பு: வீட்டிலேயே ஈசியா எப்படி தயாரிப்பது?
வேப்பிலை போட்டு ஊற வைத்த தண்ணீரில் குளித்தால், எந்தவிதமான தோல் பிரச்சனைகளை போக்கிவிடலாம்.
வேப்பிலை, பயன்படுத்தி முகப்பருக்கள், கரும்புள்ளிகள், பாக்ட்டீரிய தொற்றுகள் போன்றவற்றில் இருந்து சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
வேப்பிலையை வைத்து முகத்திற்கு ஆழகு தரும் வேப்பிலை சோப் எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- சோப்பு கட்டி- 1 துண்டு
- வேப்பிலை- 2 கைப்பிடி
- தேங்காய் எண்ணெய்- 2 டீஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸியில் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள வேப்பிலையை 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக்கொள்ளவும்.
அதில் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது வைட்டமின் இ கேப்ஸுல் சேர்த்து கலக்கி கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் சுடுதண்ணீர் கொதிக்கவிடவும் பின் சோப்பு கட்டியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கொதிக்கின்ற தண்ணீரின் மேல் வைத்து கரைக்கவும்.
சோப்பு கரைந்து வந்தவுடன் அதில் வேப்பிலை கலவையை சேர்த்து கலக்கவும்.
இந்த கலவையை சின்ன சின்ன பாத்திரத்தில் அல்லது சோப்பு அச்சில் ஊற்றி 15 நிமிடம் பிரிட்ஜில் வைக்கவும் அல்லது 1 1/2 மணி நேரம் வெளியில் வைத்தால் சோப்பு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |