கை, கால்களில் உள்ள கருமையை நீக்க இந்த 2 பொருட்கள் போதும்.., எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக உடலை ஸ்க்ரப் செய்வது நம் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி சருமத்திற்கு பளபளப்பைத் தருகிறது.
அந்தவகையில், சருமத்தில் உள்ள அழுக்குகளை இயற்கை முறையில் நீக்கி உடல் பொலிவை உடனடியாக பெற உதவும் Body scrub குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேன்- 5 ஸ்பூன்
- ஓட்ஸ்- 3 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் தேன் மற்றும் ஓட்ஸை சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
அடுத்து எப்போதும் போல சோப்பு அல்லது பாடி வாஷ் பயன்படுத்தி குளிக்கவும்.
பின்னர் இந்த ஸ்க்ரப் முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி 15 நிமிடம் நன்கு மசாஜ் செய்யவும்.
வாரத்திற்கு ஒரு முறை இந்த ஸ்க்ரப்பை தொடர்ந்து பயன்படுத்திவர சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கு சருமம் பளபளப்பாக மாறும்.
ஓட்ஸ் நம் சருமத்தை உரிக்கச் செய்து டானிங்கைக் குறைக்கிறது.
மேலும் சருமத்தை ஈரப்பதமாக்குவதோடு, பருக்கள் மற்றும் முகப்பருவை குணப்படுத்துவதிலும் பயனுள்ளதாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |