கொழுப்பை கரைக்கும் வெங்காய லேகியம்! எப்படி செய்து சாப்பிடலாம்?
ஒழுங்கற்ற வாழ்க்கைமுறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுமுறை ஆகியவற்றினால் கெட்ட கொழுப்புகள் உடலில் தங்கி இறுதியில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாவதற்கு காரணமாகிவிடுகிறது.
இதனை கரைக்க பல ஆரோக்கிய உணவுகள், மருந்துகள் கூட உண்டு. இதில் எண்ணற்ற மருத்துவ குணம் நிறைந்த சின்ன வெங்காயமும் ஒன்றாகும்.
இதில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. உடல் நலனுக்கு தேவையான அலிசின் என்ற சல்பைட்டும் இதில் உள்ளது. இது கொழுப்பை கரைக்கும் தன்மையை பெற்றிருக்கிறது.
இதில் லேகியம் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரையும்.
அந்தவகையில் தற்போது இந்த லேகியத்தை எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
தயாரிக்கும் முறை
- சின்ன வெங்காயம் - 300 கிராம்
- பூண்டு - 1
- தேங்காய் பால் - 1 கப்
- வெல்லம் - 150 கிராம்
- வெந்தயம் - அரை தேக்கரண்டி
- சீரகம் - அரை தேக்கரண்டி
- ஏலக்காய் - 4
- சுக்குத்தூள் - 1 சிட்டிகை
- நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை
சின்னவெங்காயத்தை தோல் நீக்கி இடித்து கொள்ளவும். பூண்டை தோல் நீக்கி கொள்ளவும். சீரகம், வெந்தயத்தை வெறும் கடாயில் வறுத்து பொடித்து கொள்ளவும்.
ஏலக்காயை தூளாக்கி கொள்ளவும். வெல்லத்தை சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும். வெங்காயம், பூண்டை இடித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் இடித்த வெங்காயம், பூண்டை போட்டு அதனுடன் தேங்காய் பால் சேர்த்து வேகவைத்து குழைக்கவும்.
அடுத்து வெல்லத்தை சேர்த்து ஐந்து நிமிடம் கிளறிவிட்டு, வேகவையுங்கள். அத்துடன் வறுத்து தூளாக்கிய வெந்தயம், சீரகம் போன்றவைகளை சிறிதளவு சேர்க்கவும்.
அடுத்து சுக்குத் தூள், ஏலக்காய் தூளை சேருங்கள். அனைத்து பொருட்களையும் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேகவைத்து, ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி இறக்கிவிடுங்கள்.
இதனை ஒரு பாட்டிலில் அடைத்துவைத்து மூன்று நாட்கள் வரை சாப்பிடலாம். இதனுடன் சேர்த்து தண்ணீரோ, தேனீரோ பருகக்கூடாது. இந்த லேகியம் தம்பதிகளின் உடலுக்கு பலவிதத்தில் ஊட்டம் தரும்.