இனி ஆரஞ்சு சாப்பிட்டு தோலை தூக்கிப் போடாதீங்க... சூப்பரா டீ போடலாம்!
ஆரஞ்சுப் பழத்தோலில் உள்ள வைட்டமின் சி சத்து தவிர, ஆரஞ்சுப் பழத்தோலில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்திருப்பதால் பல ஆரோக்கிய நன்மைகளுக்கு உதவுகின்றது.
இதில் டீ போட்டு குடிப்பதனால் இன்னும் பல நன்மைகள் நிறைந்துள்ளது. குறிப்பாகஇந்த டீயில் விட்டமின் சி அதிகளவில் காணப்படுகின்றன.
இதில் நிறைய பெக்டின் காணப்படுவதால் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.
தேவையான பொருட்கள்
- அரை ஆரஞ்சு பழத்தின் தோல் - சிறிதளவு
- தண்ணீர் - 1 1/2 கப்
- இலவங்கப்பட்டை - 1/2 அங்குலம்
- கிராம்பு - 3
- பச்சை ஏலக்காய் - 2
- வெல்லம் - 1/2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
-
ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் மிதமான தீயில் வையுங்கள்.
- இப்பொழுது ஆரஞ்சு தோல், இலவங்கப்பட்டை, கிராம்பு, பச்சை ஏலக்காய் சேர்த்துக் 10 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள்.
-
பிறகு அடுப்பை அணைத்து டீயை வடிகட்டி அதில் வெல்லம் சேர்த்து குடியுங்கள்.
இப்பொழுது சூப்பரான ஆரஞ்சு டீ தயாராகி விட்டது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.