நாவூரும் சுவையில் பப்பாசி லட்டு: 10 நிமிடத்தில் தயார் செய்யலாம்
Papaya
By Kirthiga
இந்திய கலாச்சாரத்தில் வேரூன்றி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உணவாக இருப்பது லட்டு. பப்பாளி பழம் எளிதில் கிடைக்கக்கூடிய பழமாகும். நீங்கள் ஒரு புதிய வகை லட்டு செய்ய வேண்டும் என்று நினைகின்றீர்களா?
உடனே உங்களுக்கு மிகவும் பிடித்த பழமான பப்பாளி பழம் வைத்து எப்படி லட்டு செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- ½ பப்பாளி பழம்
-
½ கப் பால்
-
½ கப் சர்க்கரை
-
¼ கப் பாதாம்
- ¾ கப் உலர்ந்த தேங்காய்
-
¼ கப் உலர்ந்த பழங்கள்
- 1 தேக்கரண்டி ஏலக்காய் தூள்
- ¼ கப் நெய்
செய்முறை
- முதலில் பப்பாளியை கழுவி தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.
- பாதாம், பால் மற்றும் ஏலக்காய் பொடியை அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
- ஒரு வாணலியில் தேவையான அளவு நெய்யை சூடாக்கவும்.
- சூடானதும், துருவிய பப்பாளியைச் சேர்த்து நன்கு கிளறவும்.
- பால் கலந்து, பேஸ்ட் செய்து அதில் சர்க்கரை சேர்க்கவும்.
- சிறிதளவு நெய் சேர்த்துக் கொண்டே இருக்கவும். கெட்டியாகும் போது, காய்ந்த தேங்காய் சேர்க்கவும்.
- நன்கு கிளறி, பின்னர் சிறிது நெய் சேர்க்கவும்.
- உலர்ந்த பழங்களை நன்றாக நறுக்கி, நெய் பிரியும் வரை மிதமான தீயில் கிளறவும்.
- கலவை கெட்டியானதும், அடுப்பிலிருந்து இறக்கி சிறிது ஆறவிடவும்.
- இறுதியாக உருண்டை பிடித்து பரிமாற வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US