இப்படியும் வேர்க்கடலை சட்னி செய்யலாமா?
Green Chilli
Healthy Food Recipes
Idli
By Kirthiga
பெரும்பாலும் இட்லி தோசை என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாகும். அதற்கு எப்போதும் இட்லி பொடி மற்றும் சாம்பார் என சாப்பிடுவதை விட இந்த வேர்க்கடலை சட்னி செய்து சாப்பிடால் சுவையும் அதிகம் வேலையும் குறைவாகவே காணப்படும்.
வீட்டில் இருந்தவாரே எவ்வாறு வேர்க்கடலை சட்னி செய்யலாம் என்று பார்க்கலாம்!!
தேவையான பொருட்கள்
- வறுத்த வேர்க்கடலை - 1/4 கப்
-
தேங்காய் துருவல் - சிறிதளவு
-
புதினா - 1 கப்
-
கொத்தமல்லி - 1/2 கப்
-
பச்சை மிளகாய் - 5
-
இஞ்சி - சிறிய துண்டு
-
புளி - நெல்லிக்காய் அளவு
-
உப்பு
- எண்ணெய் - தேவையான அளவு
-
கடுகு - 1/2 டீஸ்பூன்
-
காய்ந்த மிளகாய் - 2
- உளுந்தம் பருப்பு - 1 தே.கரண்டி
செய்முறை
- ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கொத்தமல்லி, புதினாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வறுத்தெடுத்து ஆறவைக்க வேண்டும்.
-
அதன் பின் மிக்சி ஜாரில் வறுத்த கொத்தமல்லி, புதினாவை போட்டு அதனுடன் வேர்க்கடலை, தேங்காய் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி, புளி, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் எண்ணெய், கடுகு, காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பு கொண்டு தாளித்து அரைத்த சட்னியில் ஊற்றி கிளற வேண்டும்.
இந்தப்படிமுறையின் மூலம் செய்தால் இட்லியுடன் சாப்பிட சுவையானதொரு வேர்க்கடலை சட்னி தயார்!!
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US