அன்னாசி பழத்தில் பாயாசமா? செய்து சாப்பிட்டு பாருங்க!!
Pine Apple
Healthy Food Recipes
By Kirthiga
பொதுவாகவே இனிப்பு என்றால் அனைவருக்கும் ஒரு விருப்பம் தான். அதிலும் பாயாசம் என்றால் புடிக்காதவர்கள் யாரும் உண்டோ?
சைவ சாப்பாடு என்றாலே பாயசம் தவறாமல் காணப்படும். பாசிப்பயறு பாயசம், பால் பாயசம் என பல வகையில் பாயசம் செய்யப்படும்.
பழத்தை வைத்து பாயசம் செய்து சாப்பிட்டு உள்ளீர்களா? அன்னாசி பழத்தை வைத்து எவ்வாறு சுவையான பாயசம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
-
அன்னாசிப்பழத் துண்டுகள்- 1 கப்
-
காய்ச்சிய பால் - 1 லிட்டர்
-
கன்டென்ஸ்டு மில்க் - 1 கப்
-
ஜவ்வரிசி - 1/2 கப்
-
பைனாப்பிள் எசன்ஸ் - 1 தே.கரண்டி
- நெய் - தேவையான அளவு
-
முந்திரி - தேவையான அளவு
- கிஸ்மிஸ் - தேவையான அளவு
செய்முறை
-
அன்னாசி பழத்தை சுத்தம் செய்து, ஒரே அளவில் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
-
பின்பு ஜவ்வரிசியை கழுவி தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும்.
-
அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி பாலை காய்ச்சி எடுக்க வேண்டும்.
-
மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டவுடன், ஜவ்வரிசியை போட்டு 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து தண்ணீர் போகும் வரை வடிக்கட்டி எடுக்க வேண்டும்.
- பால் கொதித்தவுடன் அதில் வெட்டி வைத்த அன்னாசி துண்டுகளை சேர்த்து கொதிக்க வைத்து, ஜவ்வரிசியை இதனுடன் சேர்த்து 3 நிமிடங்களாவது வேகவைக்க வேண்டும்.
-
பிறகு அதனுடன் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து சிறுது நேரம் கலக்கி பாயாசத்தை எடுக்க வேண்டும்.
- இறுதியாக அன்னாசி எசன்ஸ் மற்றும் நெய்யில் வறுத்தெடுத்த முந்திரி கிஸ்மிஸை இதனுடன் சேர்த்து எடுத்தால், சுவையான அன்னாசிப்பழ பாயாசம் தயார்!!
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US