ஒரே வாரத்தில் முடி வளர வேண்டுமா? அப்போ முயல் இரத்த ஆயில் பற்றி தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே அனைவருக்கும் நீளமான முடி என்றாலே பிடிக்கும். அதை எப்படி நீளமாக வளர வைப்பது என்று யாருக்கும் தெரியாது.
பலர் முயலின் இரத்தத்தை வைத்து எண்ணெய் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். அதை எப்படி முடிக்கு பயன்படுத்தலாம் எனவும் எப்படி வீட்டிலேயே செய்யலாம் எனவும் தெரிந்துக்கொள்வோம்.
முயல் இரத்தம்
முயல் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் அதில் இருக்கும் இரத்தம் முடி வளர்சிக்கு உதவும் என்பது தெரியுமா?
இரத்தம் என்றாலே வாசணை வீசும். ஆனால் அந்த எண்ணையில் ரத்த வாசனை வீசாது. எந்தவித வாசனையும் வராமல் முறையாக எப்படி முயல் ரத்த ஹேர் ஆயில் தயாரிக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள்
-
முயல் ரத்தம் - கால் கப்
- சுத்தமான வெள்ளை நிற காட்டன் துணி - கால் மீட்டர்
- தேங்காய் எண்ணெய் - அரை லிட்டர்
- நெல்லிக்காய் பொடி - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை பொடி - 1 ஸ்பூன்
- வெந்தய பொடி - 1 ஸ்பூன்
- வெட்டி வேர் - 10 கிராம்
செய்முறை
-
முயல் வெட்டும் கடையில் ஒரு வெள்ளை துணியை கொடுத்து, ரத்தத்தைப் பிடித்து, அந்த துணியில் நனைத்து தருமாறுக் கேட்டுக்கொள்ளவும்.
- அதை வீட்டிற்கு வந்து 3-4 நாட்கள் வரை நன்கு உலர்த்தி எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் ரத்த வாசணை வராது.
- அடுத்து ஒரு இரும்பு கடாயில் செக்கில் அரைத்த தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடாக்கிக் கொள்ளவும்.
- சூடாக்கிய எண்ணெயில் வெட்டிவேர், நெல்லிக்காய், கறிவேப்பிலை மற்றும் வெந்தயப் பொடியைச் சேர்த்து நன்கு காய்ச்சு எடுக்கவும்.
- நன்கு காய்ந்தவுடன் முயல் ரத்த துணியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதற்குள் போட்டு, 10 நிமிடத்திற்கு அப்படியே வைத்திருக்கவும்.
- அதன்பின் இந்த எண்ணெயை ஆறவிட்டு இரண்டு நாட்கள் அப்படியே மூடி வைக்கவும்.
- இரண்டு நாட்கள் கழிந்தவுடன், கை படாமல் வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைக்கலாம்.
- கைபடாமல் காய்ச்சி, வடிகட்டினால் ஆறு மாதம் வரை கெட்டுப் போகாமல் வைத்து பயன்படுத்தலாம்.
பயன்படுத்துவது எப்படி?
வாரத்துக்கு இரண்டு முதல் மூன்று நாட்களாவது இந்த எண்ணையை பூச வேண்டும். முடியின் வேர்களை வரை தேய்த்து நன்கு மசாஜ் செய்யவும்.
நன்மைகள்
-
பொடுகு தொல்லை முற்றிலும் நீங்கும்.
- வெள்ளை முடி கருமையாகும்.
- முடி உதிர்வை தடுக்கும்.
- முடி கொட்டிய இடத்தில் முளைப்பு திறன் ஏற்படுத்தும்.
- கண் எரிச்சல் நீங்கும்.
- நீளமாக, கருமையான, அடர்த்தியான முடி வளரும்.
குறிப்பு : சளி, ஆஸ்துமா உள்ளவர்கள் இரவில் வைப்பதை தவிர்ப்பது நல்லது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |