ரோட்டு கடை பானி பூரி செய்வது எப்படி?
Pani Puri: பொதுவாக, பானி பூரி என்றால் கட்டாயம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடியது. அந்த வகையில், நம் வீடுகளில் பானி பூரியை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
வீட்டில் பானி பூரி
முதலில் பானி பூரிக்கு குட்டி மொறு மொறு பூரிகளை வீடுகளில் நாம் செய்யலாம் அல்லது கடைகளில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். பிறகு வேகவைத்த உருளைக்கிழங்குடன் உப்பு, மிளகாய் தூள், சீரகத்தூள் சேர்த்து மசாலாவை நாம் தயார் செய்து கொள்ள வேண்டும்.

அதனை தொடர்ந்து ஒரு கப் புதினா, அரை கப் கொத்தமல்லி, ஒரு பச்சை மிளகாய், ஒரு இன்ச் இஞ்சி ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அரைத்து விழுதுடன் எலுமிச்சை சாறு சாட் மசாலா, கருப்பு உப்பு சேர்த்து தண்ணீரில் கரைத்தால் பானி தயார்.
இப்போது பூரி பானி, மசாலா சுண்டல், வெங்காயம் என பானி பூரி டிஷ் நம்முடைய வீடுகளில் எல்லோரும் சாப்பிடுவதற்கு எளிதாக தயாராகி விட்டது.