சூப்பரான சவ்வரிசி ரோஸ்மில்க் புடிங்! செய்யலாம் வாங்க!
வீட்டிலேயே உள்ள சவ்வரிசியை வைத்து சுவையான புடிங் செய்வது எப்படி?வாங்க பார்க்கலாம்!
தேவையான பொருட்கள்
- 3 கப் தண்ணீர்
- 100g (ஊறவைத்த சவ்வரிசி) 5மணி நேரம்
- ரோஸ் புட் கலர் -3 துளி
- ½ l பால்
- அகர் அகர் 3 தே.க
- பொடியாக்கிய கற்கண்டு 100 g
image credit:SBS
செய்முறை
ஒரு பாத்திரத்தில் 3 கப் அளவு தண்ணீர் சேர்த்து அது கொதித்த பின் அதிலே 100 g சவ்வரிசி சேர்த்துக்கொள்ளுங்கள்.
அவை நன்றாக கொதித்த பின் அதனை வடிகட்டி கொள்ளலாம்.வடிகட்டிய சவ்வை தனியாக வைத்துவிட்டு வேறோரு பாத்திரத்தில் பாலை கொதிக்கவிட்டு பின் அகர் அகர் 3 தே.க சேர்த்துக்கொள்ளுங்கள்.
பின் கிளறிவிடுங்கள்.இப்போது பொடியாக்கிய கற்கண்டினை சேர்ததுக்கொள்ளுங்கள்.இதனை நன்கு கிளறிவிடுங்கள்.
இது திக்கான பதத்திற்கு வந்த பின் வேக வைத்த சவ்வரிசியை சேர்த்து கிளறிவிடுங்கள்.
நன்றாக கொதித்த பின் ஒரு பாத்திரத்தில் சேர்த்து ஒரு 15 நிமிடம் வரை ஆறவிட்டு குளிர்சாதனப்பெட்டியில் வைத்துவிடுங்கள் அல்லது வெளியிலே 3 அல்லது 4 மணி நேரம் வைத்துவிடுங்கள்.
நன்றாக செட்டான பின்பு ஸ்ட்ரோபெரி டொப்பிங் அல்லது உங்களுக்கு பிடித்த டொப்பிங் சேர்த்து பறிமாறலாம்.