ஒரே மாதத்தில் முகம் வெள்ளையாக மாற குங்குமப்பூ நைட் கிரீம்: எப்படி தயாரிப்பது?
இயற்கையான முறையில் முகத்தை பளபளப்பாகவும் பொலிவாகவும் இருக்க இந்த குங்குமப்பூ நைட் கிரீம் போதும்.
அதிகப்படியான சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் முகம் கருப்பாக மாறிவிடுகின்றன.
இயற்கை முறையில் தயாரிக்கப்படும் இந்த குங்குமப்பூ நைட் கிரீமை பயன்படுத்தி வர முகத்தை வெள்ளைக்காகவும், பொலிவாகவும் இருக்க உதவுகின்றன.
தேவையான பொருட்கள்
- குங்குமப்பூ- 4 இதழ்கள்
- கற்றாழை ஜெல்- 2 ஸ்பூன்
- வைட்டமின் ஈ காப்ஸ்யூல்- 2
- பாதாம் எண்ணெய்- 1 ஸ்பூன்
- ரோஸ் வாட்டர்- 5 துளி
செய்முறை
ஒரு டிசு பேப்பரில் குங்குமப்பூ இதழ்களை வைத்து மடித்து அதனை ஒரு தவாவில் 2 நிமிடம் போட்டு சூடுபடுத்தவும்.
பின் இந்த குங்குமப்பூ இதழ்களை ஒரு பவுலில் போட்டு அதனுடன் கற்றாழை ஜெல், வைட்டமின் ஈ காப்ஸ்யூல், பாதாம் எண்ணெய், ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
இதனை ஒரு சிறிய பாட்டிலில் போட்டு 2 மாதம் வரை பயன்படுத்தி வரலாம்.
இதனை தொடர்ந்து பயன்படுத்தி வர தோல் பளிச்சிடவும், கரும்புள்ளிகளை நீக்கவும், முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைக்கவும் பயன்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |