வீட்டிலேயே சுவையான ஷவர்மா செய்வது எப்படி?
ஷவர்மா என்றால் என்ன என்பதை பார்ப்போம்.
ஷவர்மா லெபனான் நாட்டிலிருந்து தோன்றியதாக கூறப்படுகிறது. இவை 15 ஆவது நூற்றாண்டு காலத்து உணவு என்றும் சொல்லப்படுகிறது.
அரபிக் சொல் ஷவர்மா எனும் அரபிக் சொல் சேவிர்மே (Sevirme) எனும் துருக்கி மொழியில் இருந்து வந்தது. ஷவர்மா என்றால் சுற்றுதல் என்ற அர்த்தமாகும். லெபனானிலிருந்து சவுதி அரேபியா, துருக்கி, சிரியா, ஈராக் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா பயணிகளாக வந்தவர்கள் ஷவர்மாவை அறிமுகப்படுத்தினார்கள்.
மாக்கலவை செய்ய தேவையான பொருட்கள்
- 2 தே.க யீஸ்ட்
- 1 தே.க சீனி
- 1 கப் தண்ணீர்
- 3கப் மைதா அல்லது கோதுமை மா
- உப்பு
- தேங்காய் எண்ணெய்
சிக்கன் ஸ்டப் செய்ய தேவையான பொருள்
½ கிலோ எலும்பில்லாத சிக்கன்
¼ தயிர்
1 தே.க இஞ்சி பூண்டு பேஸ்ட்
1 தே.க மிளகாய் தூள்
½ தே.க மிளகு
½ தே.க சீரகத்தூள்
1 தே.க கரம் மசாலா
½ தே.க மஞ்சள்
1 தே.க கொத்தமல்லி தூள்
உப்பு
½ எலுமிச்சைசாறு
3 தே.க எண்ணெய்(ஆலிவ் எண்ணெய்)
மாக்கலவை செய்முறை:ஒரு மிக்ஸிங் கோப்பையை எடுத்து அதிலே யீஸ்ட் 2 தே.கரண்டியை சேர்த்துக்கொள்ளுங்கள்.அத்தோடு 1 தே.கரண்டி சீனியை சேருங்கள்.இத்தோடு 1 கப் அளவு சூடான தண்ணீரை சேருங்கள்.அதனை நன்றாக கலந்து 15 நிமிடங்களுக்கு ஊறவிடுங்கள்.அதனை மூடிவைத்துவிடுங்கள்.அது நன்றாக பொங்கி வரும் வரை விடுங்கள்.
அக்கலவையோடு 3 கப் மைதா சேருங்கள் அத்தோடு ஒரு தே.கரண்டி உப்பு சேருங்கள்.நன்றாக உருண்டை பதத்திற்கு எடுத்துக்கொண்டு சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து பிசையுங்கள்.மாவானது ஒட்டும் பதத்திலே இருப்பது நல்லது.பின் அதனை ஒரு தட்டையான பாத்திரத்தில் தட்டி இழுத்து விடுங்கள்.15 நிமிடம் இவ்வாறு செய்யுங்கள். அதன்பின் இதனை 3 மணி நேரம் பொலித்தீன் போட்டு மூடிவைத்துவிடுங்கள்.
image credit: food republic
ஸ்டப்பிங் செய்முறை:சுத்தம் செய்த சிக்கனை எடுத்து ¼ கப் புதிய தயிரை சேருங்கள்.அத்தோடு 1தே.க இஞ்சி பூண்டு பேஸ்டினை சேர்த்து 3 தே.க எண்ணெயை (ஆலிவ்)சேர்த்துக்கொள்ளுங்கள்.அத்தோடு 1 தே.க மியகாய் தூள் மற்றும் ½ மிளகு தூள் ½ தே.க மஞ்சள் அத்தோடு 1 தே.க கரம் மசாலா ½ சீரக தூள் 1 தே.க மல்லி தூள் தேவையான அளவு உப்பு மற்றும் ½ எலுமிச்சையை பிளிந்துவிடுங்கள்.எலுமிச்சை இல்லாவிடில் வினிகர் கூட சேர்க்கலாம்.எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பிணையுங்கள்.அதை மூடி 2 மணி நேரம் ஊறவிடுங்கள். பின் மாக்கலவையை எடுத்து உருண்டைகளாக எடுத்து சிறிது மைதா தூவி தட்டிக்கொள்ளுங்கள்.மெல்லியதாக உருட்டி சுட்டுக்கொள்ளுங்கள்.பின் இதனை வெள்ளைத்துணியில் முடிவிடுங்கள். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடான பின் சிக்கன் கலவையை மீடியம் தீயில் பொறித்துக்கொள்ளுங்கள்.சிக்கன் தண்ணீர் தணிந்தபின் கரண்டியால் சிக்கனை உடைத்துக்கொள்ளுங்கள்.பின் ஹை ப்ளேமில் வறுத்து விருப்பமெனில் கரட் கோவா மற்றும் வெங்காயம் சேர்த்துக்கொள்ளுங்கள் பிரட்டிக்கொள்ளுங்கள். சுட்டுவைத்த ரொட்டியில் மயோனீஸ் தடவி செய்துவைத்த சிக்கன் ஸ்டப்பை வைத்து உருட்டி டுத்பி்க்கில் குத்தி பரிமாறுங்கள்.
image credit:feel good foodie