ஒரே மாதத்தில் இயற்கையான முறையில் வெள்ளை ஆகணுமா? அப்போ இந்த Skin Whitening face pack போதும்
இயற்கையான முறையில் முகத்தை பளபளப்பாகவும் பொலிவாகவும் இருக்க கேழ்வரகு கொண்டு தயாரிக்கப்படும் இந்த face pack போதும்.
இந்த கேழ்வரவு ஃபேஸ்பேக் முகத்தில் உள்ள துளைகளை ஆழமாக சுத்தப்படுத்தி, இறந்த சரும செல்களை நீக்கி, பளபளப்பான சருமத்தை கொடுக்கிறது.
மேலும் இது முகப்பருவை தடுத்து பொலிவான சருமத்தை பெற பெரிதளவில் உதவுகிறது. சருமத்திற்கு தீவிர ஊட்டச்சத்தை அளிக்கிறது.
மேலும் சருமத்திற்கு பளபளப்பு மற்றும் பொலிவை அளிக்கிறது.
தேவையான பொருட்கள்
- கேழ்வரகு- 2 ஸ்பூன்
- பால்- 1/4 கப்
- பஞ்சு- சிறிதளவு
பயன்படுத்தும் முறை
ஒரு பவுலில் கேழ்வரகு எடுத்து அதனை பால் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.
அரைமணிநேரம் கழித்து அதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் முகத்தை பாலில் பஞ்சு தொட்டு முகத்தை துடைத்துவிட்டு இந்த பேஸ்பேக்கை முகத்தில் போட்டு அது காய்ந்தவுடன் ஈரமான துணி கொண்டு துடைத்து எடுக்க வேண்டும்.
கிடைக்கும் பயன்கள்
- சருமத்தை நன்றாக Exfoliate செய்கிறது.
- அதிகப்படியான எண்ணெய், அழுக்கு மற்றும் அசுத்தங்களை நீக்குகிறது.
- சருமத்தை இயற்கையாக புத்துணர்ச்சியடையச் செய்கிறது.
- இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து பளிச்சென்று இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |