ரோட்டுக்கடை ஸ்பெஷல் சான்ட்விச் எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்
- 3 முட்டை
- ½ வெங்காயம்
- சிறிதளவு மல்லி இலைகள்
- 2 பச்சைமிளகாய்
- உப்பு
- ½ மிளகாய்தூள்
- ¼ தே.க கரம் மசாலா
- ¼ தே.க இடித்த மிளகாய் தூள்
- ஸ்லைஸ் பாண் துண்டுகள்
image credit:street food
செய்முறை
ஒரு பாத்திரத்தில் 3 முட்டையை போட்டு நறுக்கிய வெங்காயத்தை சேருங்கள் பின் அத்தோடு கொத்தமல்லி மற்றும் பச்சைமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து பின் ½ தே.க மிளகாய் தூள் சேர்த்து அத்தோடு ¼ தே.க கரம் மசாலா சேர்த்துக்கொள்ளுங்கள்.அத்தோடு ¼ தே.க இடித்த மிளகாய் தூள் சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளுங்கள்.தோசைக்கல்லை எடுத்து அதில் எண்ணெய் சேர்த்து அதில் இந்த முட்டை கலவையை சேர்த்து குறைந்த தீ வைத்து அதிலே பாண் துண்டுகளை ஒரு பக்கம் லேசாக டிப் செய்து மறு பக்கம் திருப்பி வைத்துவிடுங்கள்.முட்டை வெந்த பின் 2 ஆக வெட்டி திருப்பிக்கொள்ளுங்கள்.அதனை மறு பக்கம் சேர்த்து திருப்பி விடுங்கள்.மீண்டும் அதனை திருப்பி பாண் துண்டு மேலே மொசரேல்லா சீஸ் துருவி போட்டுவிடுங்கள்.வெட்டிய 2 பாகங்களை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து அதனை மீண்டும் ½ பகுதிகளாக வெட்டி கொள்ளுங்கள்.சுவையான ப்ரெட் சானட்விட்ச் ரெடி!
image credit:pinterest