முட்டை இல்லாமல் வெஜ் ஆம்லெட்!..ஈஸியா செய்யலாம்
முட்டையில் ஆம்லெட் செய்வது சாம்பார் சாதம்,ரசம் சாதம் அனைத்திற்கும் நல்ல சைட்டிஷ் ஆக இருக்கும்.
ஆனாலும் சிலருக்கு முட்டை பிடிக்காத.எனவே முட்டை பிடிக்காதவர்கள் இந்த முட்டை இல்லாமல் வெஜ் ஆம்லெட் செய்து சாப்பிடலாம்.
மேலும் புரட்டாசி விரதம் இருப்பவர்கள் அசைவம் சாப்பிடக்கூடாத நிலையில் இந்த சைவ ஆம்லெட் செய்து சாப்பிடலாம்.
Yummy tummy aarthi
தேவையான பொருள்
- கடலை மாவு-1கப்
- நறுக்கிய வெங்காயம்
- நறுக்கிய தக்காளி
- நறுக்கிய பச்சைமிளகாய்
- நறுக்கிய இஞ்சி
- நறுக்கிய கொத்தமல்லி இலை
- நறுக்கிய கறிவேப்பிலை
- மஞ்சள் தூள்
- சிவப்பு மிளகாய்தூள்
- கரம் மசாலா
- எண்ணெய்
- உப்பு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் குறிப்பிட்டுள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை போட்டுக்கொள்ளவும்.
பின்பு அதில் மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள்,கரம் மசாலா,எண்ணெய், உப்பு , கடலை மாவு அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
பின்னர் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் தடவி கலவையை ஊற்றி சமமாக பரப்பவும். இருபுறமும் முழுமையாக 5 நிமிடம் வேக விடவும்.
இந்த வெஜ் ஆம்லெட் சாம்பார் சாதம், ரசம் சாதத்துடன் சூடாகப் பரிமாறவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |