ஹோட்டல் ஸ்டைல் வெஜ் தம் பிரியாணி! வீட்டிலேயே எப்படி செய்யலாம்
நீங்கள் ஒரு பிரியாணிப்பிரியராக இருந்தால் கண்டிப்பாக பல்வேறு வகையான பிரியாணி ஸ்டைல்களை ட்ரை செய்தே பார்க்கவேண்டும்.
பொதுவாக பிரியாணி என்றாலே அசைவம் தான் ஆனால் இந்த ஸடைலில் வெஜ் பிரியாணி செய்து பாருங்கள் அசைவப்பிரியர்களுக்குமே பிடிக்கும்.
வெஜ் தம் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்
image credit:feast with safiya
- 1 தே.க சிவப்பு மிளகாய் தூள்
- 1 தே.க மிளகு
- 1 தே.க பிரியாணி மசாலா
- ருசிக்கேற்ப உப்பு
- 1 காலிஃபிளவர்
- 1/2 கப் பட்டாணி
- 1 வெங்காயம்
- 2 கரட்
- 2 உருளைக்கிழங்கு
- 1 பிரியாணி இலை
- 1 இலவங்கப்பட்டை
- 1 ஸ்டார் சோம்பு
- 2 பச்சை ஏலக்காய்
- 1/2 கப் பாஸ்மதி அரிசி
ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் எண்ணெய் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு, மிருதுவாக வரும் வரை வதக்கவும்.பின் பிரியாணி இலை, இலவங்கப்பட்டை, ஜீரா, ஸ்டார் சோம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கவும்.
image credit:tickling palates
அத்தோடு நறுக்கி எடுக்கப்பட்ட கரட், காலிஃபிளவர், பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு போன்றவற்றை நன்றாக சேர்த்து வதக்குங்கள் இதனுடன் மேற்கூறப்பட்ட அளவுகளோடே சிவப்பு மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு மற்றும் பிரியாணி மசாலா சேர்த்துக் தாளித்து கொள்ளவும்.
அத்தோடு சிறிது தயிர் சேர்த்து சிறிது நேரம் வதக்கி வேகவிடவும். பின்னர், சமைத்த பாஸ்மதி சாதத்தை எடுத்து, ஒரு பாத்திரத்தில் ஒரு அடுக்கு போல வைக்கவும்.
அதன் மேல் காய்கறிகளைச் சேர்த்து, மீண்டும் பாஸ்மதி சாதத்தை போட்டு இறுதியாக, உலர் பழங்கள் மற்றும் பொறித்த வெங்காயத்தால் அலங்கரிக்கவும். ஹோட்டல் மேட் சுவையான வெஜ் தம் பிரியாணி ரெடி!