ஆரஞ்சு தோல் இருந்தா போதும்: வீட்டிலேயே Vitamin C Oil செய்யலாம்
Orange
Skin Care
By Kirthiga
வைட்டமின் சி சீரம் இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம்.
செய்முறையைத் தொடங்குவதற்கு முன், சருமத்திற்கு வைட்டமின் சி பயன்படுத்துவதன் பல நன்மைகள் கிடைக்கும். அதைப்பற்றி முதலில் தெரிந்துக்கொண்டு பின்னர் அதை எவ்வாறு செய்யலாம் என பார்க்கலாம்.
வைட்டமின் சி நன்மைகள்
- வைட்டமின் சி சருமத்தின் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்க உதவுகிறது.
-
கரும்புள்ளிகளை குறைத்து சருமத்தை தெளிவாக்க உதவுகிறது.
- முகத்தில் உள்ள சுருக்கங்களை குறைக்க உதவுகிறது.
-
இது உங்கள் சருமத்தை சேதப்படுத்தும் செல்களுடன் போராடுகிறது.
-
உங்கள் சருமத்தை உறுதியாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக்கொள்ள உதவுகிறது.
- சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கின்றது.
மேலே குறிப்பிட்டுள்ளவை சருமத்திற்கான வைட்டமின் சியின் சில நன்மைகள். இன்னும் பல நன்மைகள் உள்ளன. அதனால்தான் வைட்டமின் சி சீரம் வீட்டிலேயே தயாரித்து இயற்கையான மற்றும் மலிவு விலையில் நன்மையை பெறலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
-
1 – ஆரஞ்சு தோல்
- 1/2 கப் – வர்ஜின் தேங்காய் எண்ணெய்
செய்முறை
-
ஆரஞ்சு தோலை அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
-
பின் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் சேர்த்து தீயில் சூடாக்கிக்கொள்ள வேண்டும்.
-
எண்ணெய் சூடாகியதும் அதில் அரைத்து வைத்த ஆரஞ்சு பவுடரை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
-
கொதித்து கொண்டிருக்கும் வேளையில் எண்ணெய் நிறம் மாறினால், அடுப்பில் இருந்து இறக்கி ஒரு போத்தலில் அடைத்து வைக்க வேண்டும்.
நீங்கள் தூங்கச் செல்லும் முன் இந்த எண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் நல்லது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US