உடல் எடையை குறைக்கும் கொள்ளு துவையல் செய்வது எப்படி?
பொதுவாகவே அனைவருக்கும் தங்களது உடலை அழகாகவும் வலிமையுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
அதற்காக ஒரு சிலர் தங்களுக்கு விருப்பமான உணவுகளையும் தவிர்த்துக்கொள்வார்கள். அப்படி ஏதும் செய்யாமல் நீங்கள் எப்படி கொள்ளு துவையல் சாப்பிட்டு உடல் எடையை குறைக்கலாம் என தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- கொள்ளு - 1/2 கப் ( 125 கிராம் )
- எண்ணெய் - 2 தேக்கரண்டி
- கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - 15
- பூண்டு - 7 பற்கள்
- புளி
- துருவிய தேங்காய் - 1/2 மூடி
- கல்லுப்பு - 1 தேக்கரண்டி
- பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
- தண்ணீர்
- எண்ணெய் - 3 தேக்கரண்டி
- கடுகு
- சீரகம்
- கறிவேப்பிலை
செய்முறை
1. ஒரு பானில் கொள்ளு சேர்த்து ,பொன்னிறமாகும் வரை வறுத்து கொள்ளவும்.பின்பு நன்கு ஆறவிடவும்.
2. அதே பானில் எண்ணெய் சேர்த்து சூடானதும், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சேர்த்து வறுக்கவும்.
3. அடுத்து காய்ந்த மிளகாய், பூண்டு, புளி சேர்த்து கலந்து விடவும்.
4. பிறகு துருவிய தேங்காய், உப்பு சேர்த்து கலந்து விடவும்.
5. பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து விட்டு நன்கு ஆறவிடவும்.
6. ஆறிய பிறகு மிக்ஸியில் சேர்த்து முதலில் தண்ணீர் இன்றி அரைக்கவும். பிறகு தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
7.பிறகு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, சேர்த்து தாளிப்பை துவையலுடன் சேர்த்து கலந்து விட்டு எடுத்தால் சுவையான மற்றும் உடல் எடையை குறைக்கும் துவையல் தயார்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |