ஜோ ரூட்டை எப்படி அவுட்டாக்கலாம் தெரியுமா? ரகசியத்தை உடைத்த இங்கிலாந்து முன்னாள் வீரர்
இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஜோ ரூட்டை எப்படி அவுட்டாக்கலாம் என்பது குறித்த ரகசியத்தை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மாண்டி பானேசர் கூறியுள்ளார்.
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையே இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், இந்த தொடரில் இந்தியா 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.
இருப்பினும் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆன, ஜோ ரூட் இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக லார்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபார சதம் அடித்து 180 ஓட்டங்கள் குவித்தார்.
அவரை அவுட்டாக்குவதற்கு இந்திய வீரர்கள் திணறினர். இதுவரை இந்த தொடரில் இரண்டு சதம், ஒரு அரைசதம் என இந்திய அணிக்கு பெரும் தலைவலியை கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், இவரை அவுட்டாக்குவது எப்படி என்பது குறித்த ரகசியத்தை இங்கிலாந்து அணியின் சுழற்பந்து விச்சாளரான மாண்டே பனேசர் கூறியுள்ளார்.
அதில், ரூட்டை வீழ்த்துவதற்கு ஐந்தாவது ஸ்டெம்ப் லைனில் துல்லியமாக பந்து வீச வேண்டும். அதை பும்ரா இரண்டாவது டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸின் போது சிறப்பாக செய்தார்.
அதன் மூலம் அவர் கோஹ்லியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதுமட்டுமின்றி அவர் விளையாடும் போது திணறடித்து, அவரின் விளையாட்டு திட்டத்தை மாற்ற செய்ய வேண்டும்.
அவரால் தொடர்ந்து ரன் எடுக்க முடியாமல் இருக்கும் போது தன் திட்டத்தை மாற்றுவார். இது அவரை அவுட் ஆக்குவதற்கான வழி என்று கூறியுள்ளார்.
மேலும், ஜோ ரூட் புல் ஷாட் நன்றாக விளையாடுவதால், இந்திய பந்து வீச்சாளர்கள் அவருக்கு குறுகிய பந்துகளை விசக்கூடாது. அவரை வெளியேற்றுவதற்கு ஐந்தாவது ஸ்டம்ப் லைனிலும் ஆப் ஸ்டம்பிற்கு வெளியிலும் பந்துவீச வேண்டும்.
அவரது விக்கெட்டை இரண்டாவது இன்னிங்சில் விராட் திட்டமிட்டார் மற்றும் பும்ரா அதை சிறப்பாக செயல்படுத்தினார். விராட் மீண்டும் ரூட்டுக்கு எதிராக ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும்.
ரூட் புல் ஷாட்டை நன்றாக விளையாடுகிறார், எனவே அவருக்கு ஷார்ட் பிட்ச் பந்துகளை வீச வேண்டாம், இந்திய அணியில் இருக்கும் முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய இருவருக்கும் பேட்ஸ்மேன்களை அழுத்தம் கொடுக்கும் திறன் உள்ளது.
ரூட் எப்போது கிரீசுக்கு வந்தாலும் விராட் பும்ராவை உடனடியாக பந்து வீச அழைத்துவிட வேண்டும். பும்ரா மற்றும் சிராஜ் இருவருமே அவருக்கு அழுத்தம் கொடுக்கும் திறனைக் கொண்டுள்ளனர்.
லார்ட்ஸின் இரண்டாவது இன்னிங்சில் ரூட்டிற்கு அவர்கள் இதை சரியாக செய்தனர். அதன் காரணமாகவே அவர் அவுட் ஆகினார் என்று கூறியுள்ளார்.