கோஹ்லியை நான் இரண்டு முறையும் அவுட்டாக்கியது இப்படி தான்! ரகசியத்தை உடைத்த கைல் ஜேமிசன்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், கோஹ்லியை அவுட்டாக்கியதன் ரகசியத்தை, நியூசிலாந்து வீரர் கைல் ஜேமிசன் கூறியுள்ளார்.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரின் இறுதிப் போட்டியின், இரண்டு இன்னிங்ஸிலும் கோஹ்லியை நியூசிலாந்து பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் வீழ்த்தினார்.
இந்த போட்டி துவங்குவதற்கு முன்னரே, அந்தணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி, கோஹ்லியை நிச்சயமாக கைல் ஜேமிசன் வீழ்த்துவார் என்று கூறியிருந்தார்.
அதே போன்று இரண்டு இன்னிங்ஸிலும் அவர் வீழ்த்திகாட்டினார். இது குறித்து கைல் ஜேமிசன் கூறுகையில், ஐபிஎல் தொடரில் கோஹ்லிக்கு எதிராக வலைப்பயிற்சியில் நான் அதிக முறை பந்து வீசிய அந்த அனுபவம் எனக்கு இந்த டெஸ்ட் கிரிக்கெட்டில் கைகொடுத்தது கோஹ்லி போன்ற ஒரு வீரரின் விக்கெட் எவ்வளவு முக்கியம் என்பது எங்களுக்குத் தெரியும்.
அவரது விக்கெட்டை வீழ்த்துவது என்பது சாதாரண விடயம் கிடையாது.
எனவே அவருக்கு எதிராக நான் பந்துவீசும் போது கூடுதல் கவனத்துடன் இன்னும் அதிக அளவு ஸ்விங் செய்தும் வீசினேன்.
இதன் காரணமாகவே அவரை என்னால் வீழ்த்த முடிந்தது. இந்த டெஸ்ட் போட்டியில் இரு முறை விராட் கோலியை வீழ்த்தியது மிகவும் மகிழ்ச்சியான ஒரு விடயம் என்று கூறியுள்ளார்.