தும்மல், மூக்கடைப்பில் இருந்து உடனடி நிவாரணம் பெற வேண்டுமா? அப்போ தினமும் இந்த நீரை குடிங்க
ஒவ்வொருவரின் உடல்நிலைக்கும் ஏற்றவாறு மழைக்காலங்களிலும் வெயில்காலத்திலும் சளி, தும்மல்,குறிப்பாக மூக்கடைப்பு போன்ற தொல்லைகள் இருந்து கொண்டே தான் இருக்கும்.
இதனை சரிசெய்ய இஞ்சி, துளசி கலந்த டீயை தொடர்ந்து குடித்து வந்தால் இவற்றிலிருந்து விடுபடலாம். இந்த டீ எப்படி செய்வது என்று பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:-
டீத்தூள்
எலுமிச்சைச்சாறு
இஞ்சிச் சாறு
துளசி
தேன்
தண்ணீர்
செய்முறை:-
ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதிக்கும் போது டீத்தூள், இஞ்சிச் சாறு, துளசியைச் சேர்க்கவும். இதனை 5நிமிடம் பாத்திரத்தை மூடி கொதிக்கவிடவும்.
பின், ஒரு கப்பில் தேன் தேவைக்கேற்ப சேர்த்து டீயை வடிகட்டி கலக்கி எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து பரிமாறவும். பால் சேர்க்காமல் குடிப்பதால் இந்த டீ சுவையாக இருக்கும். விருப்பத்திற்கேற்ப சூடாகவும், குளிர்ச்சியாகவும் குடிக்கலாம்.