உங்களுக்கு அடிக்கடி தும்மல் வருகிறதா? அப்போ இந்த தேனீரை சுவைத்து பாருங்க..
எந்த திசையில் திரும்பினாலும் நோய் தொற்று அபாயம் உள்ளது. ஒருவர் தும்மினால் ஆயுசு நூறு என்று சொல்வார்கள். ஆனால் இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் தும்மினால் கொலை குற்றம் செய்தது போல் பார்க்கின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் கொரோனா வைரஸ். காலநிலை மாறுதல் சிலருக்கு ஒத்துக்காததால் அவர்களுக்கு உடல் நிலை சரியிலில்லாமல் போக வாய்ப்புண்டு.
அப்படிப்பட்டவர்கள் இந்த தேநீரை இரண்டு வேளையும் தவறாமல் குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகப்படுத்தும். சரி வாங்க இந்த தேநீரை எப்படி செய்வது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:-
கற்பூரவள்ளி- 5-6 இலைகள்
தேன்-2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்
செய்முறை:-
முதலில் கற்பூரவள்ளியில் உள்ள இலைகளை நீக்கிவிட்டு தண்டுகளை மற்றும் தனியாக சேமிக்க வேண்டும். அவ்வாறு சேமித்த தண்டுகளை பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் தேவையான தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.
கொதிக்கும் பொழுது மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து கொள்ளவும். அனைத்தும் ஒன்று சேர்ந்து நன்றாக கொதித்தவுடன் அதனை வடிகட்டி கொள்ளவும்.
கடைசியில் அந்த தேநீரில் தேனை கலந்து குடித்தால் ஒரு மணி நேரத்தில் தும்மல் வந்த அடையாளமே தெரியாமல் குணமாகிவிடும்.