Whatsapp சாட்டை நிரந்தரமாக யாருக்கும் தெரியாமல் மறைத்துவைக்க வேண்டுமா?
வாட்ஸ்அப் சாட்டை நிரந்தரமாகயாருக்கும் தெரியாமல் மறைத்துவைக்க விருப்பமா? இதனை எப்படி செய்யலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
ஐபோனில்
உங்களிடம் ஐபோன் இருந்தால், உங்கள் சாதனத்தில் வாட்ஸ்அப் ஓபன் செய்துகொள்ளுங்கள். நீங்கள் மறைக்க விரும்பும் சாட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் ஹைடு செய்ய விரும்பும் சாட்டில் இடதுபுறமாக ஸ்வைப் செய்து அதன் கூடுதல் விருப்பங்களுக்குச் செல்லவும்.
இங்கிருந்து, வாட்ஸ்அப் காப்பகங்களுக்கு நகர்த்த "Archive" விருப்பத்தைத் தட்டவும்.
இதேபோல் நீங்கள் பல சாட்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை ஒரே நேரத்தில் ஆர்ச்சிவ் ஃபோல்டருக்கு நகர்த்தலாம்.
ஆண்ட்ராய்டு
உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் ஓபன் செய்யவும். நீங்கள் மறைக்க விரும்பும் சாட்டை லாங் பிரஸ் செய்து செலக்ட் செய்யுங்கள்.
மறைக்க விரும்பும் விருப்பத்திற்கான 'Archive' ஐகானை நீங்கள் வலது மேல் மூலையில் காணலாம்.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனிலும் நீங்கள் பல தனிப்பட்ட சாட் அல்லது குழு சாட்களை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
வாட்ஸ்அப் சாட்களை நிரந்தரமாகமறைப்பது எப்படி?
Settings > Chats > Archived Chats > Keep Chats Archived என்ற ஆப்ஷனை தேர்வு செய்து இயக்கவும்.
நீங்கள் இதைச் செய்த பிறகு, நீங்கள் தேர்ந்தெடுத்த ஒவ்வொரு அரட்டையும் நிரந்தரமாக மறைக்கப்படும்.
இருப்பினும், உங்கள் அனைத்து அரட்டைகளின் மேல் ஒரு ஆர்ச்சிவ் பாக்ஸ் ஐகானை வாட்ஸ்அப் உங்களுக்குக் காண்பிக்கும்.
பின்னர் நீங்கள் விரும்பும் போது இந்த ஐகானை கிளிக் செய்து ஹைடு செய்யப்பட்ட சாட்டை அகற்றலாம்.