மும்பை இந்தியன்ஸ் அணி பொல்லார்ட்டை எப்படி வாங்கியது தெரியுமா? பல ஆண்டு ரகசியத்தை உடைத்த டேவைன் பிராவோ
மேற்கிந்திய தீவு அணியின் அதிரடி ஆட்டக்காரரான பொல்லார்ட்டை மும்பை இந்தியன்ஸ் அணி எப்படி எடுத்தது என்பது குறித்த ரகசியத்தை, டேவைன் பிராவோ இப்போது கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் பலரில் குறைந்தபட்சம் ஒரு அணிக்க்கு 3 ஆண்டுகளுக்கு மேல் விளையாடுவது கஷ்டம். சென்னை அணியில் டோனி, ஜடேஜா, ரெய்னா இதே போன்ற மற்ற அணியில் இன்னும் சில வீரர்கள் பல ஆண்டுகளாக ஒரே அணிக்காக விளையாடி வருகின்றனர்.
இப்படி ஒரே அணியில் வீரர்கள் இடம் பிடிப்பது என்று மிகவும் கஷ்டம். அப்படிப்பட்ட ஒரு வீரர் தான் கிரன் பொல்லார்ட், இவரை மும்பை அணி எப்போது வாங்கியதோ, அப்போதில் இருந்து இவரை வெளியில் அனுப்ப மனமே இல்லை.
ஏனெனில் அந்தளவிற்கு ஒரு அதிரடி ஆட்டக்காரர், பல இக்கட்டான சூழ்நிலையில் மும்பை அணியின் வெற்றிக்கு உதவியுள்ளார். கடைசி ஓவர்களில் இவரைப் போல் அதிரடியாக ஆடக் கூடிய வீரர்கள் எந்த அணியிலும் இல்லை என்று சொல்லலாம்,
அந்தளவிற்கு திறமை வாய்ந்த வீரர், இப்படி இவர் விளையாடுவார் என்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அப்போது எப்படி தெரியும்? எப்படி இவரை ஏலத்தில் எடுத்தது என்பது குறித்த ரகசியத்தை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆரம்பகாலகட்டத்தில் விளையாடி வந்த டேவைன் பிராவோ சமீபத்திய பேட்டி ஒன்ற் கூறியுள்ளார்.
அதில், மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து நான் விலகிய போது என்னுடைய இடத்திற்கான மாற்று வீரரை மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த ஒருவர் தான் நிரப்ப வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் என்னிடம் கேட்டுக் கொண்டது.
அப்போதுதான் நான் பொல்லார்டை பற்றி அவர்களிடம் கூறினேன். உடனே அவர்கள் பொல்லார்டை தொடர்பு கொண்டார்கள். அப்போது உள்ளூர் போட்டிகளில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருந்தார்.
மேலும் சாம்பியன்ஸ் லீக் தொடருக்காக ஹைதராபாத் வந்திருந்த போது நான் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு சாம்பியன்ஸ் லீக் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே நீங்கள் பொல்லார்டை ஒப்பந்தம் செய்து விடுங்கள் என்று கூறினேன்.
பிறகு பொல்லார்ட் மற்றும் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது. அந்த சந்திப்பிற்கு பிறகு பொல்லார்ட் மும்பை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டதாக கூறினார்.
ஆரம்பத்தில் பொல்லார்டை எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் போட்டிபோட இறுதியில் மும்பை அணி பொல்லார்டை வாங்கியது குறிப்பிடத்தக்கது.